Rajini 173: ஓ இதுதான் பிரச்சினையா? ‘ரஜினி 173’ல் சுந்தர் சி விலக.. கமல் சொன்ன காரணம்
கடந்த இரண்டு தினங்களாக கோடம்பாக்கத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் ரஜினி 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதுதான். யாரும் எதிர்பாராத விதமாக, ஏன் ரஜினியும் கமலும் எதிர்பார்க்காமலேயே சுந்தர் சி அந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. மிகுந்த கனத்த இதயத்துடன் இந்த படத்தில் இருந்து விலகுகிறேன் என சுந்தர் சி அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
பத்து நாட்களுக்கு முன்பு தான் சுந்தர் சி கமல் ரஜினி கூட்டணியில் ஒரு படம் உருவாகப் போகிறது என்ற ஒரு அறிவிப்பு வெளியாகியது.அதில் இருந்து கோடம்பாக்கத்தில் இருப்பவர்களும் சரி ரசிகர்களும் சரி மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். சுந்தர் சி ரஜினி கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள் என்ற ஒரு ஆர்வமே அவர்களுக்கு மிகுந்த ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தி இருந்தது.
ஏனெனில் இவர்கள் கூட்டணியில் முதன் முதலில் உருவான திரைப்படம் அருணாச்சலம் .அது எந்த அளவுக்கு கமர்சியலாகவும் குடும்ப படமாகவும் சென்டிமென்ட் படமாகவும் எல்லாம் கலந்து கலவையாகவும் இருந்து மக்களால் ரசிக்கப்பட்டதோ அப்படி ஒரு பீல் குட் திரைப்படத்தை அதுவும் ரஜினியிடம் இருந்து நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்பார்க்கப் போகிறோம் என்பதை நினைத்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தார்கள்.
ஆனால் திடீரென இந்த படத்தில் இருந்து விலகுகிறேன் என சுந்தர் சி கூறி ரசிகர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியை உண்டாக்கினார். அதற்கான காரணம் என்ன என்பதை பற்றி பல சர்ச்சைகள் வெளியாகின. அதிக சம்பளம் சுந்தர் சி கேட்கிறார் என்றும் இவர் சொன்ன கதை கமலுக்கும் ரஜினிக்கும் பிடிக்கவில்லை என்றும் பல வகையான சர்ச்சைகள் வந்து கொண்டே இருந்தன. ஆனால் இதைப் பற்றி இதற்கு காரணம் என்ன என்பதை பற்றி இருதரப்புமே கூறவில்லை. அந்த நேரத்தில் கமல் டெல்லியில் இருந்தார்.
இன்றுதான் சென்னை வந்திருக்கிறார். அவர் வந்ததும் பத்திரிகையாளர்கள் விமான நிலையத்திலேயே ரஜினி 173 படத்தைப் பற்றி விசாரித்தனர். அதற்கு கமல் கூறியது என்னவெனில் நான் ஒரு தயாரிப்பாளன். என்னுடைய நட்சத்திரத்திற்கு பிடித்தமான கதையை செய்வதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும் என்று கூறினார். அதாவது ரஜினியை குறிப்பிட்டே தன்னுடைய நட்சத்திரம் என குறிப்பிட்டு இருந்தார்.

அப்போ கதையில் ஏதும் முரண்பாடு இருக்கிறதா என நிருபர்கள் கேட்க அவருக்கு பிடிக்கும் வரை நாங்கள் கதையை தேடிக் கொண்டிருப்போம் என்று பதிலளித்தார். அதுமட்டுமல்ல நானும் ரஜினியும் சேர்ந்து நடிக்க போகும் படத்திற்கும் கதையை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறுகிறார். எந்த மாதிரியான கதையாக இருக்கும் என்ற கேள்விக்கு எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று தன்னுடைய பாணியில் சொல்லிவிட்டு சென்றார். இவர் இப்படி கூறியதிலிருந்து என்ன நமக்கு தெரிய வருகிறது என்றால் சுந்தர் சி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்பதுதான் உண்மையான காரணம் என தெரிய வந்திருக்கிறது.
