×

காலியாகும் கமல் மையம்... இந்த ரணகளத்திலும் உங்களால மட்டும் தான் இப்படி பண்ண முடியும்

கமல் கட்சி ஆரம்பிச்ச நேரமோ என்னமோ தெரிலை தொடர்ந்து ஒவ்வொருத்தரா ஏதேதோ காரணம் சொல்லி டாட்டா காமிச்சிட்டு இருக்காங்க. அட இது தான் இப்படி இருக்குனு பார்த்தா திரைபடமும் இவருக்கு சதி பண்ணிட்டு இருக்கு.

 
Kamal-Haasan

கமல் கட்சி ஆரம்பிச்ச நேரமோ என்னமோ தெரிலை தொடர்ந்து ஒவ்வொருத்தரா ஏதேதோ காரணம் சொல்லி டாட்டா காமிச்சிட்டு இருக்காங்க. அட இது தான் இப்படி இருக்குனு பார்த்தா திரைபடமும் இவருக்கு சதி பண்ணிட்டு இருக்கு.

கட்சியில் இருக்கும் பெரும்பாலானோர் விலகிய நிலையிலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பற்றி யோசிக்கும் கமலின் மனசை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

 கமல் ஹாசன் குழந்தைகளின் நலனுக்காக தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கரோனா பெருந்தொற்றின் கொடூர தாண்டவத்தால் நிறைய குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். வாடி நிற்கும் பிஞ்சுகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரசுகள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. புது டெல்லி அரசும் இலவசக் கல்வி வழங்குகிறது.

ஆந்திர அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு தொடங்கி 10 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையாகச் செலுத்தப்படும் என்றும், இந்த டெபாசிட் தொகையின் மூலமாகக் கிடைக்கும் வட்டி வருவாய் மூலம் பாதுகாவலர் அந்தக் குழந்தையை நன்றாக கவனிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை அவர்களின் உறவினர் அல்லது பெற்றோரில் நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் பராமரிப்பதே சிறந்தது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏற்கெனவே இழப்பில் வாடும் குழந்தைகளை முன்பின் தெரியாதவர்கள் தத்தெடுத்தால், குழந்தைகள் மனரீதியில் பாதிக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News