ஒரே மாதத்தில் இரண்டு ராஜாக்களை இழந்தோம்...பாக்யராஜ் மறைவுக்கு கமல்ஹாசனின் உருக்கமான பதிவு..
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியராக விளங்கிய கே. பாக்யராஜின் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் பதிவு ஒன்றை வெளியிடுள்ளார்.
தமிழ் சினிமாவில் "திரைக்கதை மன்னன்" என ரசிகர்களால் அழைக்கப்பட்ட கே. பாக்யராஜ், இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் என பல திறமைவாய்ந்தவர். குடும்பம், காதல், நகைச்சுவை மற்றும் சமூக கருத்துகளை எளிமையான திரைக்கதைகளில் சொல்லும் அவரது பாணி தமிழ் சினிமாவில் தனி அடையாளத்தை உருவாக்கியது. 'முந்தானை முடிச்சு', 'தூறல் நின்னு போச்சு', 'மௌன கீதங்கள்', 'சுந்தர காண்டம்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கியவர்.
மேலும் , நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கே. பாக்யராஜின் 'ராஜன்' (50 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானவர்) இன்று நம்மிடையே இல்லை. ஒரே மாதத்தில் தமிழ் சினிமா இரண்டு 'ராஜன்'களை இழந்துவிட்டது" என்று குறிப்பிட்டு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
கமல்ஹாசன் மற்றும் கே. பாக்யராஜ் பல்வேறு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். குறிப்பாக 'அந்த 7 நாட்கள்' திரைப்படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். மேலும், 'ஒரு கைதியின் டைரி' திரைப்படத்திற்கு கே. பாக்யராஜ் கதை மற்றும் திரைக்கதை எழுதியிருந்த நிலையில், அதில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கே. பாக்யராஜின் மறைவால் தமிழ் திரையுலகம் ஈடு செய்ய முடியாத இழப்பை சந்தித்துள்ளது. அவரின் திரைப்படங்களும், தனித்துவமான திரைக்கதை சொல்லும் பாணியும் என்றும் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும்.
