Connect with us

Cinema News

ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட கமல்ஹாசன் – உதயநிதி ஸ்டாலின்.! ஏன் இந்த விளம்பரம்.?!

உலக நாயகன் கமல்ஹாசன் தனது ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கீழ் 54 வது படத்தில் உதயநிதியை ஹீரோவாக வைத்து தயாரிக்கவுள்ளதாக நேற்று அறிவித்தார். ரெட் ஜெயண்ட் மூவீஸின் 15 ஆண்டுகால சினிமாவைக் கொண்டாடும் நிகழ்வின் போது இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர், இந்த நிகழ்வின் போது மேடையில் பேசிய கமல், இனி வரவிருக்கும் படங்களில் வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து படம் தயாரிக்கவுள்ளதாகவும் அதில் நீங்கள் தான் முதல் நடிகர் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த உதயநிதி, ஐயோ, நீங்கள் இப்படி சொல்லுவீங்கன்னு நான் எதிர்பாக்கல என்று தெரிவித்தார். இவர்கள் இணையும் இந்த கூட்டணி குறித்து ஏற்கனவே சந்தித்து பேசியதாகவும், விளம்பரத்துக்காக மேடையில் இப்படியெல்ல்லாம் பேசுவது கொஞ்சமாவது நியாமா என்று சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகிரார்கள். இதுகுறித்து, சமூக வலைதளத்தில் ரசிர்கள் கலாய்க்க தொடங்கி விட்டனர்.

இதையும் படிங்களேன்  – அம்மாவுக்கு தெரியாமல் அதனை செய்வார் கேப்டன் விஜயகாந்த..! பழம்பெரும் நடிகை நெகிழ்ச்சி பதிவு…

உதயநிதி ஸ்டாலின் கடைசியாக ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்திலும் நடித்து வருகிறார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top