Categories: Cinema News latest news

மணிரத்னத்தை தொடர்ந்து ராஜமௌலியுடன் கைக்கோர்க்கும் உலகநாயகன்… ஆண்டவர் லிஸ்ட் இப்படி நீண்டுகிட்டே போகுதே!!

“மகதீரா” “நான் ஈ”, “பாகுபலி” போன்ற திரைப்படங்களின் மூலம் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ராஜமௌலி, “RRR” திரைப்படத்தின் மூலம் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார். தற்போது இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் ராஜமௌலி, தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

SS Rajamouli

ராஜமௌலி தெலுங்கு சினிமாவின் “ஸ்டூடன்ட் நம்பர் ஒன்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படம் மாபெறும் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து “சிம்ஹாத்ரி”, “சயி”, “சத்ரபதி”, “விக்ரமார்க்குடு” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கினார். இவ்வாறு டோலிவுட்டின் வெற்றி இயக்குனராக திகழ்ந்த ராஜமௌலி “மகதீரா” திரைப்படத்தின் மூலம் பிரம்மாண்ட இயக்குனராக அறியப்பட்டார். இதனை தொடர்ந்து “நான் ஈ”, “பாகுபலி”, போன்ற திரைப்படங்கள் அவரை பேன் இந்திய இயக்குனராக ஆக்கியது.

RRR

இத்திரைப்படங்களை தொடர்ந்து ராஜமௌலி இயக்கிய “RRR” திரைப்படம் உலகளவில் 1200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது. குறிப்பாக சர்வதேச அளவில் இதுவரை 12 விருதுகளை குவித்துள்ளது இத்திரைப்படம். இவ்வாறு தற்போது உலகளவில் பேசப்பட்டு வரும் இயக்குனரான ராஜமௌலியுடன் உலக நாயகன் கமல்ஹாசன் கைக்கோர்க்கவுள்ளாராம்.

சமீபத்தில் கமல்ஹாசனும், ராஜமௌலியும் சந்தித்து வெகு நேரம் உரையாடிக்கொண்டிருந்தனராம். அந்த சந்திப்பில் ராஜமௌலி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: கமல்ஹாசனுக்கு போட்டியாக ஒரு குட்டி குழந்தைக்கு கட் அவுட் வைத்த தயாரிப்பாளர்… இப்படி ஒரு புரோமோஷனா??

Kamal Haasan and Rajamouli

கமல்ஹாசன் தற்போது “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். மேலும் பா.ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோரின் இயக்கத்திலும் கமல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தன. இந்த நிலையில்தான் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Arun Prasad
Published by
Arun Prasad