
Cinema News
நடிகையின் முதுகில் அடி கொடுத்த கமல்!.. அதனால் கமலை பார்த்தாலே அந்த நடிகைக்கு பயம்…
Published on
By
தமிழ் நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு பிறகு சிறப்பான நடிகர் என அறியப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் அப்போது முதல் இப்போது வரை தமிழ் சினிமாவில் தனது மார்க்கெட் குறையாமல் இருந்து வருகிறார்.
கமல்ஹாசன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அவருடன் நடிக்கும் நடிகர்களை கூட அவரேதான் தேர்ந்தெடுப்பார். இதனால் அவரது படங்களில் நடிகர் நாசர், டெல்லி கணேஷ், நாகேஷ் போன்ற நடிகர்களை அதிகமாக பார்க்க முடியும். அனைவரிடமும் இவர் நடிப்பை எதிர்பார்ப்பதால் புதுமுக கதாநாயகிகள் கமலிடம் நடிப்பது குறித்து அப்போது பயப்படுவது உண்டு.
நடிகை சுகன்யா, ஷோபனா போன்ற பலரும் கமலிடம் நடிப்பது தனக்கு பயமாக இருந்தது என பேட்டிகளில் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு மற்றொரு காரணமும் உண்டு. புதிதாக நடிக்க வரும் நடிகைகளிடம் குறும்பு செய்து அவர்களை பயமுறுத்துவதை வழக்கமாக கொண்டவர் கமல்.
சுலோக்ஷனாவிற்கு நடந்த அனுபவம்:
நடிகை சுலோக்ஷனா இதே மாதிரி தனக்கு நடந்த அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார் சுலோக்ஷனா. அந்த படத்தில் கமலுடன் நடிக்க போகிறோம் என்பதால் வழக்கம்போல பயத்துடனே சென்றுள்ளார் சுலோக்ஷனா.
அங்கே சென்ற பிறகு ஒரு நடனக்காட்சி படமாக்கப்பட இருந்தது. சாதரணமாகவே கமல்ஹாசன் நன்றாக ஆடக்கூடியவர். ஆனால் சுலோக்ஷனாவிற்கு ஆடவே தெரியாது. இதை கேட்டதும் கமல் அவரை பயமுறுத்தியுள்ளார். ஆட தெரியாது எனில் உனக்கு பிரச்சனைதான் என கமல் கூறியுள்ளார்.
ஆனால் ஆட சொன்னதும் உடனே அந்த நடனங்களை சரியாக ஆடியுள்ளார் சுலோக்ஷனா. இதை பார்த்த கமல்ஹாசன் அவரது முதுகில் ஓங்கி அடித்துள்ளார். உனக்கு ஆட தெரியுமா? பிறகு ஏன் என்னிடம் பொய் சொன்னாய் என கேட்டுள்ளார்.
இல்லை சார் எனக்கு பரதநாட்டியம்தான் ஆட தெரியும். சினிமா டான்ஸ் எல்லாம் ஆட தெரியாது என அப்பாவியாக கூறியுள்ளார் சுலோக்ஷனா. இப்படி புது முக கதாநாயகிகளை பயமுறுத்துவதை வேலையாக வைத்திருந்தார் கமல் என ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் சுலோக்ஷனா.
இதையும் படிங்க: சம்பளம்லாம் தர முடியாது- காமெடி நடிகரை அநியாயமாக ஏமாற்றிய சந்தானம்…
விடுதலை 2 திரைப்படத்திற்கு பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் எடுக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். ஆனால் முழுக்கதையும் ரெடி ஆகாததால் சூர்யா நடிக்க...
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...