கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 'தலைவர் 173' படத்தின் டைட்டில் அறிவிப்புக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!
கோலிவுட்டின் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துக்கு 'ஜெயிலர் 2', 'தலைவர் 173', 'KHxRK Reunion' படம் என மூன்று படங்கள் அடுத்தடுத்து லைன் அப்பில் இருக்கிறது.
இதில் 'தலைவர் 173' படத்தை முதலில் இயக்குநர் சுந்தர்.சி இயக்குவதாக இருந்து, பின் அவர் விலகி இயக்குநர் சிபி சக்கரவர்த்தி கமிட்டாகி, அதன் பிறகு அவருக்கும் நோ சொல்லிவிட்டு 'டிராகன்' இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துக்கு யெஸ் சொன்னார் ரஜினி.
நடிகர் கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் துவங்கியது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ரஜினி இல்லாத காட்சிகளை படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.
தற்போது, இப்படத்தின் டைட்டிலை நாளை (ஜூன் 24-ஆம் தேதி) காலை 10 மணிக்கு அறிவிக்கப்போவதாக RKFI நிறுவனம் எக்ஸ் தளத்தில் ஒரு போஸ்டருடன் பதிவிட்டிருக்கிறது. ஆனால், போஸ்டரில் இதை அஸ்வத் மாரிமுத்து தான் இயக்குகிறார் என குறிப்பிடவில்லை.
One Name
— Raaj Kamal Films International (@RKFI) June 23, 2026
Forever a Celebration
Title Reveal tomorrow at 10:00 AM#Thalaivar173 #SuperstarRajinikanth #KamalHaasan @rajinikanth @ikamalhaasan #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/RsPA3izK9i
null
