Categories: Cinema News latest news

பயில்வான் கேட்ட கேள்வி!.. மனதில் வைத்து பல வருடங்கள் கழித்து பழிவாங்கிய கமல்ஹாசன்!…

1975 ஆம் ஆண்டு “பட்டாம்பூச்சி” என்ற ஒரு திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்ப்பின்போது அப்போது பத்திரிக்கையாளராக இருந்த பயில்வான் ரங்கநாதன் “கதாநாயகன்னா கதாநாயகியை காப்பாற்றனும். படத்துல கதாநாயகியை கற்பழிக்க வர்ராங்க, நீங்க என்னாடான்னா விழுந்தடிச்சி ஓடிட்டீங்களே” என கேட்டிருக்கிறார்.

Kamal Haasan

பயில்வான் ரங்கநாதன் இந்த கேள்வியை கேட்டதும் கமல்ஹாசனுக்கு ஷாக் ஆகிவிட்டது. அதன் பின் அந்த கேள்விக்கு இயக்குனர் பிரகாசம் பதில் சொல்வார் என்று கமல் கூறினாராம். “கதையம்சமே அப்படி வடிவமைக்கப்பட்டதுதான்” என இயக்குனர் பயில்வானுக்கு பதிலளித்தாராம்.

Bayilvan Ranganathan

இந்த சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு “அவ்வை சண்முகி” திரைப்படத்தில் பயில்வான் ரங்கநாதனை கமல்ஹாசன் பழிவாங்கினாராம். அதாவது “அவ்வை சண்முகி” திரைப்படத்தில் பயில்வான் ரங்கநாதன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம்.

Kamal Haasan

ஆனால் கமல்ஹாசன் அந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தை குறைத்து ஒரு சிறு கதாப்பாத்திரமாக ஆக்கிவிட்டாராம். அதே போல் கமல்ஹாசன் நடித்த மற்றொரு திரைப்படத்தில் பயில்வான் ரங்கநாதன் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் அந்த படத்தில் அவர் நடிக்க வேண்டிய கதாப்பாத்திரத்தில் வேறொருவரை நடிக்க வைத்துவிட்டாராம் கமல்ஹாசன். இவ்வாறு கமல்ஹாசன் தன்னை பழிவாங்கினார் என்று தனது வீடியோ ஒன்றில் கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

இதையும் படிங்க: கொஞ்சம் விட்ருந்தா ஷாருக்கானுக்கே ஆப்பு வச்சிருப்பார்!… அட்லி செய்த காரியத்தால் அலண்டுபோன பாலிவுட் பாட்ஷா…

Published by
Arun Prasad