Categories: Cinema News latest news

கமல் கையை வச்சே இந்தியன் தாத்தா கண்ணை குத்தும் கல்கி!.. என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சே!..

பிரபாஸ் நடிப்பில் அடுத்த பலகோடி பட்ஜெட் படமாக கல்கி திரைப்படம் உருவாகியுள்ளது. அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இன்று வெளியானது. அதைப் பார்த்த கமல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு பக்கம் அது கமல் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும் இந்தியன் 2 படக்குழுவுக்கு பெரிய பிரச்சனையை உண்டாக்கும் என்றே பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.

ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என தேதி குறிப்பிடாமல் மாதத்தை மட்டும் குறிப்பிட்டு லைகா நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

இதையும் படிங்க: சினேகாவுக்கு இப்படி ஒரு நோய் இருக்கா?!.. போட்டு உடைச்சிட்டாரே பிரசன்னா?!…

இந்நிலையில் தற்போது கல்கி திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்கி படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடித்துள்ளார். வெறும் 20 நாள் கால்ஷீட்டுக்கு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கு வில்லனாக கல்கி படம் மாறிவிடுமோ அச்சம் தற்போதைய எழுந்துள்ளது. பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, கமல்ஹாசன் மற்றும் பசுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கல்கி திரைப்படம் வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதி வெளியாகப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மே 1ல் பெரிய ட்ரீட்தான்.. அஜித் அனுமதிக்காக காத்திருக்கும் ‘விடாமுயற்சி’ டீம்! அதாவது நடக்குமா?

ஜூன் 13-ஆம் தேதி கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் ரிலீசாகும் எனது எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மே மாதம் மட்டுமே நடுவே உள்ள நிலையில் இயக்குனர் சங்கர் உலகம் முழுவதும் இந்தியன் 2 படத்தை எப்படி புரமோட் செய்யப் போகிறார் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்தியன் 2 மற்றும் கல்கி அடுத்தடுத்த வாரங்களில் வெளியானால் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு அதைவிட மிகப்பெரிய ட்ரீட் இருக்காது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் இந்தியன் 2 படத்துக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: விஜய் நடிக்க வேண்டிய படம்.. சிம்புவை வைத்து களமிறங்கும் இயக்குனர்! இது புது அப்டேட்டால இருக்கு

Saranya M
Published by
Saranya M