Categories: Cinema News latest news

இந்த வயசுல இது தேவையா? உடம்பு தாங்குமா? பதற வைத்த கமல்

தமிழ் சினிமாவில் கமல் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் இந்தியன் 2.  படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். முக்கால்வாசி படப்பிடிப்பு வெளி நாடுகளிலேயே படமாக்கப்பட்டது.

எதிலும் வித்தியாசமாக யோசிக்கும் கமல் இந்தப் படத்தின் முதல் பாகத்திலும் வித்தியாசமான தோற்றத்தில் இருப்பார். மேலும் மேக்கப் விஷயத்தில் மிகவும் மெனக்கிடக் கூடியவர் கமல். தசாவதாரம், அவ்வைசண்முகி போன்ற படங்களில் மேக்கபிற்கே தனது முழு நேரத்தை ஒதுக்கியிருப்பார்.

kamal1

எதையும் பெர்ஃபெக்ட்டாக பண்ணக் கூடியவர். ஆனால் ரசிகர்களும் சரி சினிமா சாராத ஒரு சில பேர் ஆனாலும் சரி கமலுக்கு இந்த வயசில் இது தேவைதானா என கேட்டு வருகின்றனர். 70 வயதை  நெருங்கும் கமல் இன்னும் சினிமாவிற்காக தன்னை இப்படி வருத்துகிறாரே என்று புலம்பி வருகின்றனர்.

அதுவும் இந்தியன் 2 படத்திற்காக மிகவும் மெனக்கிட்டுக் கொண்டிருக்கிறாராம். ஏனெனில் அந்தப் படத்திற்காக மேக்கப்பில் பல மணி நேரம் ஒதுக்க வேண்டியிருப்பதால் சாப்பிட கூட நேரமில்லாமல் அதுவும் சாப்பாடு திட உணவாக உள்ளே கொடுக்க முடியாதாம்.

kamal2

ஏனெனில் முகத்தை முழுவதுமாக கவர் பண்ணி மேக்கப் போடுவதால் முழுவதும் நீர் ஆகாரமாகத்தான் எடுத்துக் கொள்கிறாராம் கமல். ஸ்டார் போட்டு உறிஞ்சி தான் எடுத்துக் கொள்கிறாராம். இந்த வயதில் இப்படி கஷ்டப்படனுமா என்று ஆதங்கப்படுகின்றனர்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini