கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக சித்து இதானி நடித்திருக்கிறார். படத்திற்கு இசைப்புயல் ஏஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மூலம் சிம்புவை அனைவரும் பாராட்டி
வருகின்றனர். ஏனெனில் இந்த படத்திற்காக தன் உடம்பை மேலும் மெலிவாக்கி கதைக்கு ஏற்றாற் போல் உள்ள வடிவமைப்பில் வந்து படத்திற்கு என்ன தேவையோ அதை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்கள் : மனிதாபிமானம் இல்லாத ஆளு மணிரத்னம்…! சரத்குமாருக்கு நடந்த கொடுமையை வெளிச்சம் போட்டு காட்டிய பார்த்திபன்…
மேலும் சில பல சர்ச்சைகளுக்கும் உள்ளானார் இயக்குனர் கௌதம் மேனன். அதையும் தாண்டி படம் ஓரளவு நேர்மறையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில் டிரெய்லரின் கௌதம் மேனனின் வாய்ஸ் ஓவரில் டிரெய்லர் வெளியானது.
ஆனால் அது உண்மையிலயே நடிகர் கமல் பண்ண வேண்டியது தானாம். அப்போது கமல் பொன்னியின் செல்வன் படத்திற்கான வாய்ஸ் ஓவரில் பிஸியாக இருந்ததால் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என கருதி வேறு யாரையும் நம்பாமல் கௌதம் மேனனே அதை பேசியிருக்கிறார்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…