விஜய்யோட இந்த போக்கு தொடரவேண்டும்!.. திடீரென கமல் சொன்ன மேட்டர்?.. என்ன ஆச்சு?..
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்கும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நேற்று சட்டப்பேரவையில் அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது பல ஆண்டுகளாக தமிழ்நாட்டின் மரபாக இருந்து வரும் நிலையில் அந்த மரபை பின்பற்றுவதில் தவெக அரசு எந்தவித சமரசமும் செய்யாது என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது; வரவேற்கத்தக்கது. மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்தப் போக்கு தொடரவேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 11, 2026
மேலும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தத் தீர்மானத்திற்கு கட்சி வேறுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், “அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது; வரவேற்கத்தக்கது. மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்தப் போக்கு தொடர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.