
Cinema News
எத்தனை காதல் தோல்வி படங்கள் வந்தாலும் இந்த ஒரு படத்திற்கு ஈடாகாது…எவ்வளவு ரசனை…! எத்தனை நடிப்பு..!
Published on
உலக நாயகன் நடித்த 80ஸ் படங்கள் மிகவும் மெச மாஸானவை. அவற்றை இப்போது பார்த்தாலும் நமக்குள் ஒரு ஆனந்த ஊற்று பெருக்கெடுக்கும்.
மிகச்சிறந்த கலைஞனுக்கு மிகச்சிறந்த கதை அமைந்து அதில் தன் பாத்திரப்படைப்புக்கு உயிர் கொடுக்கும்போது எப்பேர்ப்பட்ட ரசிகனும் அந்தப் படத்தை ரசிக்கத் தான் செய்வான்.
அந்த வகையில் ஒரு மிகச்சிறந்த காதல் தோல்வி படம் என்றால் அது கமல்ஹாசன் நடித்த மூன்றாம் பிறை தான். எப்படி என்று பார்ப்போமா…
Moondram pirai2
1982ல் வெளிவந்த மூன்றாம்பிறை படத்தை பாலு மகேந்திரா இயக்கியுள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் சீனு என்ற சீனிவாசனாக வாழ்ந்திருப்பார். அதே நேரம் ஸ்ரீதேவி பாக்யலட்சுமி என்ற விஜியாக வாழ்ந்திருப்பார். முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்திற்கு இசையமைத்து உயிர் கொடுத்தவர் இசைஞானி இளையராஜா.
கதை இதுதான்..!
விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு மனநிலை பாதிக்கப்படுகிறாள் பாக்யலட்சுமி. அவளுக்கு பெற்றோர்களைக் கூட அடையாளம் தெரியாமல் போய் விடுகிறது. அப்படி ஒரு பாதிப்பு. கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜ் தான். ஆனால் நடத்தையில் குழந்தை போன்ற மனநிலைக்கு மாறி விடுகிறார்.
ஒரு கட்டத்தில் கடத்தப்பட்டு விபச்சார விடுதிக்கு கொண்டு செல்லப் படுகிறார் பாக்யலட்சுமி. அங்கு அவளுக்கு பெயர் விஜி என்று பெயர் வைக்கிறார்கள். அங்கு வரும் சீனு அவளின் நிலையறிந்து அவரை அந்த இடத்தில் இருந்து மீட்டு தன் இடத்திற்கு கூட்டி வருகிறார்.
அவளைப் பாதுகாத்து அவளின் மனநோயைக் குணப்படுத்த பல்வேறு வகையில் போராடுகிறார் சீனு. அதே சமயம் காவல்துறை உதவியுடன் காணாமல் போன மகளை அவளது பெற்றோர் தேடி அலைகின்றனர். கடைசியில் ஒரு கட்டத்தில் பாக்யலட்சுமி குணமாகிறார்.
குணமடைந்த பிறகு சீனுவின் நினைவு அவள் மனத்திலோ நினைவிலோ ஒரு துளி கூட இல்லை. மனநிலை சரியாகி பெற்றோருடன் ரெயிலில் ஊருக்கு புறப்படுகிறார் விஜி.
Moondram pirai climax
அப்போது ரெயில் நிலையத்திற்கு விஜியைக் காண ஓடோடி வருகிறார் சீனு. வரும் வழியில் அங்கங்கே முட்டி மோதி சகதியில் புரண்டு என பதற்றம் பற்ற ஓடி ஓடி வருகிறார் சீனு. ரத்தக் காயத்துடன் சகதி படிந்த ஆடையோடு இருக்கும் அவரை விஜி துளியும் கண்டுகொள்ளவில்லை. அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
அதன் பின் அரங்கேறும் அந்த 7 நிமிட காட்சியை உணர்வுபூர்வமாக வார்த்தைகளால் வடிக்க இயலாது. அகன்ற திரையில் கண்டு களியுங்கள். நெஞ்சை உருக்கும் அற்புதமான காட்சி இது.
சிறந்த காதல் தோல்வி படம்
காதல் தோல்வி படங்களில் இது ஒரு சிறந்த படம். நாயகனின் மனதில் இருக்கும் காதலை கண்ணதாசன் தன்னுடைய பாடல் வரிகளினால் படம் பார்ப்போருக்கு தெளிவுபடுத்தி இருப்பார்.
‘காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்… கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்…உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே…நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி” என்று பெரும் உள்ளக்குமுறலை வார்த்தைகளில் வடித்திருப்பார் கவிஞர்.
இது தான் கண்ணதாசனின் கடைசி பாடலும் கூட. பாடல் கண்ணே கலைமானே…என்று தொடங்குகிறது.
இந்த வார்த்தைகளில் உள்ள காதலின் ஆழத்தை யாராலும் விவரிக்க முடியாது. தாய்மை உணர்வுள்ள ஒரு காதலனின் பிரதிபலிப்பாகவே சீனுவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
தனது காதலியின் நினைவாக இயக்குனர் பாலு மகேந்திரா சிற்பி போல செதுக்கிய காவியம் தான் இந்த மூன்றாம் பிறை.
அன்று முதல் இன்று வரை காதலை திரையில் காட்டிய பல்லாயிரக்கணக்கான திரைப்படங்கள் இருந்தாலும் காமம் மற்றும் முக கவர்ச்சி உட்பட எந்தவிதமான ஆபாசமும் இல்லாமல் வெளி வந்த படம்.
உண்மையான அன்பின்பால் ஏற்படும் உன்னதமான காதல் தான் இந்தப் படம். இது போல் இதுவரை எந்த ஒரு படமும் வந்தது இல்லை என்றே சொல்லலாம். இந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக உலகநாயகன் கமலுக்கு தேசிய விருது கிடைத்தது.
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அந்த படத்திற்கு முன் அஜித் நடிப்பில்...