
Cinema News
ரசிகர்கள் ரசித்த சத்தியராஜின் ஃபேமஸ் வசனம்!.. காரணமே கமல்தான்!.. அட தெரியாம போச்சே!..
Published on
By
சினிமாவில் நடிகர்கள் பேசும் சில வசனங்களை கவர்ந்துவிடும். உதாரணத்திற்கு எம்.ஆர்.ராதா என்றாலே அவர் பேசும் வசனங்களுக்காகவே படம் பார்க்க செல்வார்கள். அவர் நடித்த நாடகங்களுக்கு கூட்டம் கூடியதற்கு காரணம் கூட வசனங்கள்தன. இரத்தக்கண்னீர் உள்ளிட்ட பல படங்களில் அவர் பேசும் வசனங்கள் இப்போதும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல்தான் ரஜினியும். அவர் பேசிய பல பன்ச் வசனங்கள் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். நடிகர்களில் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி கொண்டவர் சத்தியராஜ். அவரை அப்படி மாற்றியவர் அவரின் நண்பரும், இயக்குனருமான மணிவண்ணன்தான். கோயம்பத்தூர் உடல்மொழி மற்றும் வட்டார வழக்கில் வசனங்களை கொடுத்து அவரை பேச வைத்தார்.
இதையும் படிங்க: கையில கத்தி!.. மனசுல கெட்ட புத்தி.. நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுங்க கமல்.. கொதிக்கும் ரசிகர்கள்!..
அதில், ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது சத்தியராஜ் பல திரைப்படங்களிலும் பேசிய ‘என் கேரக்ட்ரயே புரிஞ்சிக்க மாட்றீங்களே’ என்கிற வசனம்தான். கமலுக்கு சத்தியராஜை மிகவும் பிடிக்கும். நானாபடேகர் போன்ற குணச்சித்திர நடிகராக வரவேண்டியவர் ஹீரோ, லொள்ளு என மாறிவிட்டாரே என்கிற வருத்தமும் அவருக்கு உண்டு.
சத்தியராஜ் கமலுடன் இணைந்து விக்ரம், காக்கி சட்டை, மங்கம்மா சபதம் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதில், காக்கி சட்டை படத்தில் ஒரு காட்சியில் ‘தகடு தகடு’ என வசனம் பேசுவார் சத்தியராஜ். அதைப்பார்த்த கமல் மிகவும் ரசித்தாராம். இது நல்லா இருக்கே என சொன்ன கமல் அந்த படத்தில் ஏற்கனவே நடித்துமுடித்த காட்சிகளை மீண்டும் எடுத்து அதில் சத்தியராஜை அப்படி பேச வைத்தாராம்.
சத்தியராஜ் பேசிய இந்த வசனத்தை ரசிகர்கள் மிகவும் ரசித்தனர். எனவே, பல படங்களிலும் சத்தியராஜ் அதேபோல் வசனம் பேசி நடித்தார். ஆனால், கமல் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பல திரைப்படங்களில் மட்டமான வேடங்களில் சத்தியராஜ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இப்போது நல்ல குணச்சித்திர நடிகராக அவர் வலம் வருகிறார்.
இதையும் படிங்க: விஜய்க்கு ஹிட் அடிச்ச ‘போக்கிரி’ அந்த கமல் படம்தான்!.. எவ்ளோ நேக்கா அடிக்கிறாங்க!..
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...
Ajith Vijay: தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ...
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...