Categories: Cinema News latest news

தனுஷ் நடிக்கும் படத்தில் கமல், ரஜினி, சிம்பு? இதெல்லாம் வெறும் கனவா இல்லை நனவா?..

நீண்ட நாள்களாக கமலும், ரஜினியும் இணைந்து நடிப்பார்களா என்ற ஏக்கம் ரசிகர்களுக்கு இருந்து கொண்டே இருந்தது. அதே போல தனுஷ், சிம்பு இதுவரை சேர்ந்து நடிக்கவே இல்லை. இந்த காம்போ வந்தால் எப்படி இருக்கும்? அதற்கான நேரம் வந்துவிட்டதா… பார்ப்போம்.

தமிழ்த்திரை உலகின் இளம் நட்சத்திரங்களில் வேகமாக முன்னேறி வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பு மட்டும் அல்லாமல் தயாரிப்பு, இயக்கம் என அடுத்தடுத்த துறைகளில் கால் பதித்து வேகம் காட்டி வருகிறார்.

இசைஞானி இளையராஜாவின் மகன் யுவனும் நடிக்க உள்ளாராம். 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்த ஜாம்பவான் தான் இளையராஜா. உலகின் சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவராகவும் உள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாம். அந்தப் படத்தில் தனுஷ் தான் இளையராஜாவாக நடிக்கப் போகிறாராம்.

Dhanush, Ilaiyaraja

இந்தப்படத்தை பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்க உள்ளதாகவும் முதலில் கூறப்பட்டது. ஆனால் அதன்பிறகு கேப்டன் மில்லரை இயக்கிய அருண்மாதேஸ்வரன் இயக்க உள்ளதாகவும் தெரிகிறது. இந்தப்படத்திற்கான முதல் கட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கமல், ரஜினி கேமியோ ரோல்களில் தோன்றுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இருவருமே இளையராஜாவின் சிறந்த நண்பர்கள். இவர்கள் நடித்த படங்களுக்குப் பல கிளாசிக் ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் இளையராஜா தான்.

இந்த பயோபிக்கில் ஏ.ஆர்.ரகுமானாக சிம்பு நடிக்க உள்ளதாகவும் பேசப்படுகிறது. இந்தத் தகவல்கள் எல்லாம் இன்னும் உறுதிப்படுத்தப்படாததாக உள்ளன. இவை எல்லாம் நடந்தால் ரசிகர்களுக்குப் பெரிய கொண்டாட்டமாக இருக்கும். இதில் பெரிய விசேஷம் என்னவென்றால் இரு தலைமுறை நடிகர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு நடிக்க உள்ளார்கள். கமல் – ரஜினி, தனுஷ் – சிம்பு என இணைந்து நடிப்பது இதுவரை யாருமே எதிர்பார்க்காதது. நடந்தால் இது ஒரு தரமான சம்பவம் தான்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v