Rajini 173: கதையை அவர்கிட்ட வாங்கு.. படத்தை ரெடி பண்ணு.. ‘ரஜினி173’க்காக கமல் எடுக்கும் முடிவு
ரஜினி 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகிய பிறகு அந்த படத்திற்கு யார் இயக்குனர் என்ற ஒரு கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது .தற்போது ரஜினி ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அவருடைய 173 ஆவது படத்தில் நடிப்பதாக இருந்தது. அந்த படத்தை சுந்தர் சி இயக்க கமல் அந்த படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. அதற்கான பூஜையும் போடப்பட்டது. அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திலேயே இந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அது கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் ரஜினி கமல் இவர்களிடம் முன்பே இதைப் பற்றி சொல்லாமல் சுந்தர் சி அவராகவே அந்த அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது கமலுக்கும் ரஜினிக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் இது அவர்களுக்கு அவமானம் என்றும் பல பேர் கூறி வருகின்றனர். இன்று தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக இரு பெரும் ஆளுமைகளாக இருப்பவர்கள் ரஜினி கமல்.
அவர்கள் இணையும் படத்தில் கூட்டணி வைத்து அதன் பிறகு அந்தப் படத்தில் இருந்து விலகுகிறார் என்றால் ரஜினி கமல் இவர்களிடம் பேசி அதன் பிறகு இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு தெரியாமலேயே சுந்தர் சி இந்த அறிக்கையை வெளியிட்டு இருப்பது தான் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நேரத்தில் கமல் டெல்லியில் இருந்தார்.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பியதும் ரஜினி 173 படத்தை பற்றி அவரிடம் கேட்டபோது என்னுடைய ஹீரோக்கு கதை பிடிக்கவில்லை என்றால் அதை நான் நிச்சயமாக பண்ண மாட்டேன். அவருக்கு பிடிக்கும் வரை கதையை கேட்டுக் கொண்டே இருப்போம் என்றும் தெரிவித்து இருந்தார். அது மட்டுமல்ல புதுமுக இயக்குனர்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது வந்த தகவல் படி ரஜினி 173 படத்திற்காக கமல் வெளியில் கதை கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த படம் ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்க வேண்டும் என்பதால் பிரபல நாவலாசிரியர் ராஜேஷ்குமாரிடம் கமல் அணுகி இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே சந்தானம் நடிக்கும் ஒரு படத்திற்கும் ராஜசேகர் கதை எழுதிக் கொண்டு இருக்கிறாராம். ராஜேஷ்குமார் கதையில் சமூக சிந்தனையுடன் கிரைம் நாவலாகவும் இருக்கும். அதனால் ரஜினி 173 படத்திற்காக ராஜேஷ்குமார் கதை எழுதினால் நன்றாக இருக்கும் என கமல் நினைத்திருக்கிறாராம்.
