Categories: Cinema News latest news

விஜய் சேதுபதியின் ரகசியத்தை வெளிச்சம் போட்டு காட்டிய கமல்…! வைரலாகும் புகைப்படம்..

சினிமாவில் தென்னிந்திய நடிகர்களில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் தன் திறமையை காட்டி வருகிறார். அண்மையில் வெளிவந்த விக்ரம் படத்தில் சந்தனம் கதாபாத்திரத்தில் நெகடிவ் கேரக்டரில் நடித்து அசத்தினார்.

ஹீரோவாக மட்டுமில்லாமல் கதைக்கு ஏற்ற என்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அசராமல் நடிக்கும் ஒரே நடிகர் விஜய் சேதுபதி தான். ஆரம்பத்தில் துணை நடிகராக வந்தவர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த தென்மேற்கு பருவகாற்று படத்தில் ஹீரோவாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார்.

சமீபகாலமாக நெகடிவ் ரோலிலும் நடித்து எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் நடிகர் என்ற பெயரையும் தக்கவைத்துள்ளார். விக்ரம் படத்தில் சந்தனம் கதாபாத்திரத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் அனல் தெறிக்க வைத்திருப்பார்.

இந்த நிலையில் கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் புரடக்‌ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் படத்தில் வரும் விஜய்சேதுபதியின் குடும்ப புகைபடத்தை பகிர்ந்து சந்தனத்தின் பலம் பலவீனம் இரண்டுமே அவன் குடும்பம் மட்டுமே என்ற ட்விட் வைரலாகி வருகிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini