Categories: Cinema News latest news

ரெடியா இரு…! சம்பவம் இருக்கு…பிரபல ஒளிப்பதிவாளரை மிரள வைத்த ஆண்டவர்..!

கமல் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் விக்ரம். படம் வெளியானதில் இருந்தே ரசிகர்களின் கூட்டம் திருவிழா போல காட்சியளிக்கிறது. படம் பார்த்து வெளியே வந்தவர்கள் உணர்ச்சி ததும்ப தங்களுடைய ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றனர்.

மேலும் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் போன்றோரின் நடிப்பு சொல்லிமாலாது. அந்த அளவுக்கு நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளனர். மேலும் கடைசி நிமிடத்தில் வரும் சூர்யாவின் நடிப்பு மிரட்ட வைத்து விட்டது என்று பலதரப்பு விமர்சனங்கள் முன் வருகின்றனர்.

எல்லாவற்றிற்கு மேல் அனிருத் இசையில் படம் வேற லெவல். குறிப்பாக படத்தில் இயக்குனர், கமல், இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோரின் பங்களிப்பு பாராட்டுகுரியது. இந்த நிலையில் படத்தை பார்த்த சேது, நந்தா, வாரணம் ஆயிரம் படத்திற்கு ஒளிப்பதிவாளராக இருந்த ரத்னவேலு தன் ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் படத்தை பற்றிய தன்னுடைய கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் கமல் சார் “ இருக்கிற எல்லா சிலிண்டரையும் உங்கள் புதிய அவதாரத்தால் வெடிக்க வைத்து விட்டீர்கள் “ என்று கூறியிருந்தார்.

அதற்கு கமல் தன்னுடைய பதில் ட்விட்டில்” நன்றி, உன்னுடயை சிலிண்டரையும் ஃபில் பண்ணி வை. சீக்கிரமே இருவரும் இணைவோம் என்று “ பதிலுக்கு கூறியுள்ளார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini