Categories: Cinema News latest news throwback stories

சிலுக்குக்கு கமல் சொல்லிக் கொடுத்த கெட்டவார்த்தை…படப்பிடிப்பில் நடந்த களேபரம்…!

சினிமா படப்பிடிப்பு என்றால் நடிகர்களுக்கு உற்சாகத்திற்கும், ஜாலிக்கும் குறைவிருக்காது. சினிமாவில் நாம் பார்ப்பதை விட பல சுவாரஸ்யமான சம்பவங்கள் சினிமா படப்பிடிப்பில் நடைபெறும். அதிலும் மொழி தெரியாத நடிகரோ அல்லது நடிகையோ வந்துவிட்டால் இன்னும் அவ்வளவுதான். அவரை வைத்து பல விஷயங்களை செய்துவிடுவார்கள். அப்படி ஒரு படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை இங்கே தெரிந்துகொள்வோம்.

kamal

கமல் நடிப்பில் உருவான திரைப்படம் ‘சகலகலா வல்லவன்’. ஏவிஎம் தயாரிப்பில் உருவான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக அம்பிகா நடித்திருப்பார். இப்படத்தின் படப்பிடிப்பில் கேஷியர் ஒருவர் எல்லாரையும் கலாய்த்துக் கொண்டே இருப்பாராம். அவரை எதாவது செய்ய வேண்டும் என கமலும், ஒய்.ஜி. மகேந்திரனும் முடிவெடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ராதிகாவின் படப்பிடிப்பை நிறுத்திய எம்ஜிஆர்!.. ஹோட்டலில் செய்த அலப்பறையால் திக்குமுக்காடிய படக்குழு!..

அப்போது அவர்களிடம் வந்த சிலுக்கு ‘கேஷியருக்கு நன்றி சொல்ல வேண்டும். நல்ல தமிழ் வார்த்தைகளை சொல்லிக் கொடுங்கள்’ என கேட்டுள்ளார். இதுதான் சரியான சமயம் என கணக்குப்போட்ட கமலும், ஒய்.ஜி. மகேந்திரனும் அவருக்கு சில கெட்ட வார்த்தைகளை சொல்லிகொடுத்துள்ளனர்.

silukku

சிலுக்கும் கேஷியரிடம் சென்று அதை அப்படியே சொல்ல கேஷியர் அழாத குறைதான். அதன்பின் அவரிடம் கமலும், ஒய்.ஜி.மகேந்திரனும் சென்று நடந்த விஷயங்களை சொல்லி அவரை சகஜ நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

சிலுக்கு ஆந்திராவில் இருந்து வந்தவர். அவருக்குதான் தெலுங்குதான் நன்றாக தெரியும். அதன்பின்னரே தமிழை கொஞ்சம் பேச கற்றுகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா