Categories: Cinema News latest news throwback stories

இதுக்காடா நீ சினிமாவுக்கு வந்த?!. கமலிடம் கோபப்பட்ட ஜெமினி கணேசன்.. நடந்தது இதுதான்..

ஜெமினிகணேசனை அந்தக் காலத்தில் காதல் மன்னன் என்று சொல்வார்கள். படத்தில் டை கட்டி நடிக்கும் போது அச்சு அசல் அவர் பெரிய ஆபீசர் மாதிரியே இருப்பார். உலகநாயகன் கமலுக்கு  பாலசந்தரிடம் அழைத்துப் போய் சினிமா வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தவரும் இவர் தான். இவரைப் பற்றி கமல் ஒரு முறை இவ்வாறு பேசினார்.

நான் சந்தித்த முதல் சினிமா நடிகர் ஜெமினிகணேசன் தான். அப்போது எனக்கு மூன்றரை வயது. அவர் ஒரு சினிமா நடிகர் என்று என்னை அழைத்துச் சென்றார்கள். ஆனால் அவரே என்னைப் பார்த்த உடனே தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்து விட்டார். ஆனால் நானோ ஜெமினிகணேசனைப் பார்த்ததே இல்லை. அதனால் அவர் தான் ஜெமினி கணேசன் என்றே எனக்குத் தெரியாது. இவர் வேறு யாரோ என்று நினைத்துக் கொண்டேன். அதன்பிறகு தான் தெரிந்தது. சாவித்திரி அம்மா ஓடி வந்தாங்க. இது யாரு என்று என்னைக் கொஞ்சினாங்க. நான் அவரை மாமான்னு தான் அழைப்பேன்.

என் கூட யதார்த்தமா விளையாடிக் கொண்டே எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது அவர் தான். நான் டை கட்ட ஆரம்பித்ததே அவரால் தான். வேட்டியே கட்டத் தெரியாத எனக்கு அதை சொல்லிக் கொடுத்தது அவர் தான்.

Gemini, Kamal

அதே போல அன்னை வேளாங்கன்னி படத்தில் துணை இயக்குனராக வேலை பார்த்தேன். அப்போது என்னிடம் அவரே வந்து பேசினார். நீ தானே அது என்றார். ‘இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கே’ன்னு கேட்டார். அசிஸ்டண்ட் டைரக்டர்னு சொன்னேன். இதுக்காடா நீ வந்தேன்னு கேட்டார். உடனே காரில் அழைத்துச் சென்று பக்கத்து ஸ்டூடியோவுக்குப் போனார். அங்கு வேற ஒரு இயக்குனரிடம் அறிமுகப்படுத்தினார். ‘இந்தப் பையன் நடிக்கணும்’ என்றார்.

அந்த இயக்குனர் ‘இந்த பையன் நடிக்கணும்னு ஆசைப்படுறானா?’ன்னு கேட்டார்.  ‘இல்ல நான் ஆசைப்படுறே’ன்னு ஜெமினிகணேன் சொன்னார். அதை என்னால் மறக்கவே முடியாது. அவர் என்னை எந்த இயக்குனரிடம் அழைத்துக் கொண்டு போனார் தெரியுமா? அவர் தான் கே.பாலசந்தர்’ என கமல் கூறியிருந்தார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v