தர்மனுக்காக அப்பவே கமல் போட்ட பிளான்... இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

 
dharman, kamal

கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் தர்மன். இதற்கான அறிவிப்பு கடந்த சில தினங்களில் கமல் அறிவிக்க இன்டஸ்ட்ரியே பரபரப்பானது. இப்போது பர்ஸ்ட் சிங்கிளும் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. படத்தில் ரஜினி டெரர் டாக்டராக வருகிறார். சந்திரமுகி, வேட்டையாடு விளையாடு கலவையாக படத்தின் கதை இருக்கும்னு சொல்றாங்க.

இந்தப் படத்தில் கமல், ரஜினி இணைவது ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு. எப்போ மீண்டும் இருவரும் சேர்வார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்தாங்க. முதலில் கேஎஸ்.ரவிக்குமார் இருவரையும் இயக்குவார்னு பார்த்தாங்க. அப்புறம் சுந்தர்.சி, சிபிச்சக்கரவர்த்தி என பெயர் அடிபட்டது. ஆனால் கடைசியாக டிராகன் புகழ் அஸ்வத் மாரிமுத்து அந்தப் பெருமையைத் தட்டிப் பறித்துள்ளார். இந்தப் படம் குறித்தும், ரஜினியுடன் போட்ட பிளான் குறித்தும் கமல் என்ன சொல்கிறார்னு பாருங்க. 

என்னை தர்மன் தயாரிக்கும் வரை மார்க்கெட்ல வச்சிருந்ததுக்கு இன்டஸ்ட்ரிக்கு நன்றி. ரஜினிக்கும், எனக்கும் 50 வருஷ நட்பு. என்னுடன் நடிக்க ஆரம்பிச்சி ஒண்ணு ரெண்டு வருஷத்துல அவரும் ஈக்குவெல் ரோலுக்கு வந்துட்டாரு. அவரு ஆரம்பத்துல ஒரு பிட் ரோல்ல வந்தாரு. ரெண்டே வருஷத்துல ஈக்குவல். அப்போ நாங்க ரெண்டு பேரும் பாம்பேக்கு பிளைட்ல போற வசதியும் வந்துச்சு. அப்போ நாங்க எடுத்த முடிவு என்னன்னா, நாம ரெண்டு பேரும் படம் பண்றோம்.

ஒண்ணு நீங்க தயாரிக்கணும். இல்லை நான் தயாரிக்கணும். நல்ல கதையில நடிக்கணும்னு அப்பவே பேசினோம். இங்கே ஆழ்வார்பேட்டையில ஆபீஸ் திறக்கும்போது நீங்க திறந்து வைங்கன்னு கூப்பிட்டேன். அப்போ இங்கே மொட்டை மாடியில நின்னு பேசும்போது  எப்ப பண்ணலாம்னு கேட்டேன். எப்ப வேணாலும் பண்ணலாம்னு சொன்னார். கதை கிடைக்கிற வரையிலும் தேடிக்கிட்டே இருந்தோம். இப்போ ரெண்டு படம் பண்றோம். இதுவும், இன்னொன்னும் என்றார் முத்தாய்ப்பாக கமல். 

Tags

From Around the web