Connect with us
Kamal Balachander

Cinema News

34 நாள்கள் நடித்த எனக்கு இதுதான் சம்பளமா?… பாலசந்தரிடம் கொந்தளித்த கமல்!..

1973ல் வெளியான அரங்கேற்றம் படத்தின் போது நடந்த சில சுவாரசியமான சம்பவங்களை பிரபல சினிமா விமர்சகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

அரங்கேற்றம் படத்தின்போது பாலசந்தர் அழைத்ததுமே தன்னை உதவி இயக்குனராகத் தான் அழைக்கிறார் என்ற எண்ணத்துடன் கமல் சென்றார். அங்கு பார்த்தால் படத்தில் நடிப்பதற்காகத் தான் அழைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காகத் தான் அவர் அழைத்தது தெரிந்து போய்விட்டது. இதை விட்டால் இந்த வாய்ப்பும் கிடைக்காது என்று எண்ணிய கமல் நடிக்க ஒப்புக்கொண்டார். சிவகுமார், ஜெயசுதா, பிரமிளா, எஸ்.வி.சுப்பையா, செந்தாமரை, எம்.என்.ராஜம் இவர்களுடன் கமலின் பெயரும் இணைந்தது. படப்பிடிப்பின்போது கமல் காட்டிய சில முகபாவனைகள் பாலசந்தரைப் பெரிதும் கவர்ந்தது. குறிப்பிட்ட காட்சியில் பாலசந்தர் சொல்லாத உணர்ச்சிகளையும் சேர்த்துக் காட்டியது பாலசந்தரைப் பெரிதும் கவர்ந்தது.

Aranketram

kamal

அதன் காரணமாக அரங்கேற்றம் படத்தின் உச்சக்கட்ட காட்சியில் கமலுக்காக சில காட்சிகளைச் சேர்த்தார். தன் உதவியாளரும், நண்பருமான அனந்துவிடம் கமல் பற்றி சிலாகித்துச் சொன்னார் பாலசந்தர். இந்தப் பையன்கிட்ட ஒரு பெரிய ஸ்பார்க் இருக்கு. நிச்சயமா மிகப்பெரிய பெரிய நடிகராக வருவான் என்றார். அனந்துவும் அதை ஆமோதித்தார்.

படம் வெளியாகி சில நாள்களுக்குப் பிறகு கமல் பாலசந்தரை வந்து சந்தித்தார். அப்போது கமல் சிறப்பாக நடித்ததற்கு பாலசந்தர் அவரை பாராட்டினார். ஆனால் கமல் வந்த விஷயமே வேற. அவரிடம் ஒரு செக் இருந்தது. அதை பாலசந்தரிடம் கொடுத்தார். அது கலாகேந்திரா நிறுவனம் கமலுக்குக் கொடுத்த செக். 500 ரூபாய் தொகையைக் கொண்டது. மொத்தம் 34 நாள் சூட்டிங் வந்துருக்கேன் சார். அதுக்கு எனக்கு இதுதான் சம்பளமா… இதை அப்படியே திருப்பிக் கொடுக்கவா? என்று கோபத்துடன் கேட்டார் கமல்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை இது ஒரு சோதனை முயற்சி தான். இது நல்லா ஓடுச்சின்னா இதை போல 100 மடங்கு நீ சம்பாதிக்கப் போற. இந்தப் படத்துல உன் வேஷத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. அதனால ஆத்திரப்பட்டு செக்கைத் திருப்பிக் கொடுத்துடாதே. தொடர்ந்து உனக்கு நல்ல நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு வரும்.

என்னோட அடுத்த படத்துலயும் உன்னை நடிக்க வைக்கிறேன்னு பாலசந்தர் சொன்னதும் அமைதியானார் கமல். பாலசந்தரும் தான் சொன்னபடியே தனது அடுத்த படமான ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் மிக வித்தியாசமான பாத்திரத்தில் கமலை நடிக்க வைத்தார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top