விஜய்யின் 'ஜன நாயகன்' டிக்கெட் புக்கிங்கில் புது விஷயத்தை செய்யப்போகும் 'கமலா சினிமாஸ்'!

 
Jana Nayagan vijay kamala cinemas

தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வந்த 'தளபதி' விஜய்யின் 69-வது படம் தான் 'ஜன நாயகன்'. இப்போது தமிழக முதலமைச்சராக இருக்கும் விஜய்யின் கடைசி படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இந்த படம் நாளை (ஜூலை 23-ஆம் தேதி) உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது. ஆல்ரெடி எல்லா திரையரங்குகளிலும் முதல் நாளுக்கான டிக்கெட் புக்கிங் ஓப்பன் பண்ணி விட்டார்கள்.

இந்நிலையில், சென்னையில் உள்ள 'கமலா சினிமாஸ்'-ன் ஓனர் விஷ்ணு கமல் 'ஜன நாயகன்' புக்கிங்கில் ஒரு புதிய விஷயத்தை செய்யப்போகிறார். வழக்கமாக முதல் ஒரு வாரத்துக்கு தான் புது படங்களுக்கான புக்கிங்கை ஓப்பன் பண்ணுவார்கள்.

ஆனால், விஷ்ணு கமல் இந்த படத்தின் 25-வது நாள் கொண்டாட்டத்திற்காக ப்ளான் பண்ணி இப்பவே வருகிற ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கான புக்கிங்கையும் தனது கமலா சினிமாஸில் ஓப்பன் பண்ணப்போகிறாராம்.

From Around the web