×

ரகுவரனை பார்த்து பயந்த கமல்ஹாசன் - இத்தனை நாள் இது தெரியாம போச்சே!...

நடிகர் ரகுவரனுடன் ஏன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கவில்லை என்பதன் பின்னணி தெரியவந்துள்ளது.
 
kamal
ஹைலைட்ஸ்:
தமிழ் சினிமா வில்லன் என்றால் ஆஜானுபாகுவான உடல் இருக்க வேண்டும், கத்தி பேச வேண்டும் என்கிற இலக்கணத்தை உடைத்து உடல் மொழி மற்றும் பார்வைகளாலேயே மிரட்டும் நடிப்பை கொடுத்து மிரள வைத்தவர் ரகுவரன்

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான குரல் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ரகுவரன். ஹீரோ, வில்லன், சைக்கோ கதாபாத்திரம், குணச்சித்திர வேடம் என எதுவாக இருந்தாலும் அசால்ட்டாக நடித்து விட்டு சென்றுவிடுவார். தமிழ் சினிமா வில்லன் என்றால் ஆஜானுபாகுவான உடல் இருக்க வேண்டும், கத்தி பேச வேண்டும் என்கிற இலக்கணத்தை உடைத்து உடல் மொழி மற்றும் பார்வைகளாலேயே மிரட்டும் நடிப்பை கொடுத்து மிரள வைத்தவர் ரகுவரன். அண்ணனாக, தந்தையாக, பக்கத்து வீட்டுக்காரராக அவர் காட்டிய பாந்தமான நடிப்பும் பலரையும் கவர்ந்தது.

raghuvaran
raghuvaran

இவர் ஏராளமான திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனியாக அவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. ரஜினியுடன் பல படங்களில் நடித்தவர். ரகுவரன் நடிக்க வேண்டும் என ரஜினியே விரும்பி அவரை தனது படங்களில் நடிக்க வைப்பார். நடிகை ரோகினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். 2008ம் ஆண்டு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார்.

raghu
raghuvaran

முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் நடித்திருந்தாலும் அவர் கமல்ஹாசனுடன் மட்டும் நடிக்கவே இல்லை. அவர்கள் இருவரும் இணைவதை கடந்த பல வருடங்களாகவே ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அது கடைசி வரை நடக்கவே இல்லை. அதற்கான காரணம் தற்போது வெளியே கசிந்துள்ளது.

kamal
kamalhaasan

கமல்ஹாசன் சிறந்த நடிகர் என்றாலும் ரகுவரன் தன்னுடன் நடித்தால் தன்னையே தூக்கி சாப்பிட்டு விடுவார் என்கிற எண்ணத்தில்தான் ரகுவரனுடன் நடிப்பதை கமல்ஹாசன் தவிர்த்து வந்தாராம். மேலும், அவர் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு வேடத்திற்கு ரகுவரனை நடிக்க வைக்க இயக்குனர்கள் நினைத்தாலும் ‘அவர் வேண்டாம்’ என மறுத்து விடுவாராம். இதனால்தான், கமல்ஹாசனுடன் ரகுவரன் நடிக்கவே இல்லையாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News