Categories: Cinema News latest news

அடுத்த ரோலக்ஸ் ரெடி!..தளபதி 67-ல் அந்த பெரிய நடிகர்…செம ட்ரீட் இருக்கு!….

சில திரைப்படங்களில் நடிகர்கள் ஒரே ஒரு காட்சியில் மட்டும் வருவார்கள். அது கதைக்கே சுவாரஸ்யமாக இருக்கும். நடிகர் ஆர்யா, விஜய் சேதுபதி, கமல்ஹாசன் ஆகியோர் இதை அதிகம் செய்துள்ளனர்.

ரோலக்ஸ் :

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதை ஒரு டிரெண்ட் செட் ஆகவே மாற்றிவிட்டார். அவர் இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் அதகளம் செய்தார் நடிகர் சூர்யா. அதுவே அப்படத்திற்கு பெரிய ஹைப்பை உருவாக்கியது.

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல ஹீரோக்களும் மற்ற ஹீரோக்களின் திரைப்படத்தில் ஒரு காட்சியில் வரும் கேமியோ ரோல் செய்ய ஆசைப்படுகிறார்களாம்.

தளபதி 67:

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜயை வைத்து இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் கமல்ஹாசன் கேமியோ ரோல் செய்யவுள்ளாராம். கமலுக்கு விக்ரம் எனும் மாபெரும் ஹிட் படத்தை லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளதால் கமலின் குட்புக்கில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். எனவே, அவர் கேட்டால் கமல் மறுக்கமாட்டார். அதோடு, விஜயும் கமலுடன் நல்ல நட்பு பாராட்டி வருவதால் இதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

எப்படி இருந்தாலும், விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் வேடத்தில் அசால்ட் செய்து ரசிகர்களை கவர்ந்தது போலவே, தளபதி 67 படத்தில் கமல்ஹாசன் செய்வது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ரசிகர்களுக்கு காத்திருக்கு செம ட்ரீட்!..

Published by
சிவா