
Cinema News
நீங்க என்னடா என்ன படம் எடுக்க விடாம பண்றது!.. மிரட்டல் அளித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கமல்ஹாசன்…
Published on
By
கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் கமல் கமல்ஹாசன். தமிழில் முதன்முதலாக களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமானார் கமல்ஹாசன்.
அதனை தொடர்ந்து வரிசையாக வாய்ப்புகளை பெற்றார். கமல்ஹாசனை திரைத்துறையில் பெரிய நடிகராக வளர்த்து விட்டதில் இயக்குனர் பாலச்சந்தருக்கு பெரும் பங்கு உண்டு. இயக்குனர் பாலச்சந்தர் நாகேஷிற்கு பிறகு ஒரு சிறந்த நடிகராக கமல்ஹாசனைதான் பார்த்தார். எனவே அவர் இயக்கிய பல படங்களில் தொடர்ந்து கமல்ஹாசனை நடிக்க வைத்தார்.
kamal
கமல்ஹாசன் படங்களை தயாரிக்க துவங்கிய பொழுது அவருக்கு பிடித்த பல கதைகளை தமிழ் சினிமாவில் படமாக்கினார். அப்படி படம் தயாரிக்கும்பொழுது சில படங்கள் சர்ச்சைக்குரிய படங்களாக அமைந்ததால் அவருக்கு அதனால் சில பிரச்சனைகளும் வந்தன.
படத்திற்கு வந்த பிரச்சனை:
விருமாண்டி திரைப்படத்தை இயக்கும்போது இப்படியான ஒரு சம்பவம் நடந்தது. விருமாண்டி திரைப்படத்திற்கு முதலில் சண்டியர் என்றுதான் பெயர் வைத்திருந்தார் கமலஹாசன். ஆனால் அந்தப் பெயருக்கு நிறைய சர்ச்சைகள் வந்ததால் பிறகு படத்தின் பெயரை விருமாண்டி என மாற்றி விட்டார்.
virumandi
அப்பொழுதும் கூட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அந்த படங்களை எடுக்க சில அரசியல் அமைப்புகள் அனுமதிக்கவில்லை. ஆனால் படத்தின் கதைகளம் தென் மாவட்டத்தில்தான் அமைந்திருந்தது. எனவே கமல்ஹாசன் படத்தில் வரும் அந்த கிராமத்தை அப்படியே ஒரு செட் போட்டு அதில் படமாக்கினார். மொத்த படத்தையும் செட்டிலேயே எடுத்து வெளியிட்டார் கமல்ஹாசன்.
இப்படி தமிழ் சினிமாவில் மிகவும் சிக்கலான விஷயங்களை கூட சகஜமாக கையாளுபவராக கமல்ஹாசன் இருந்தார்.
இதையும் படிங்க: தேவர் மகன் பார்த்துவிட்டு கவுண்டமணி அடித்த கமெண்ட்!.. அதிர்ந்து போன சிவாஜி…
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...