Kamal: கமலின் கையில் 5 புதிய படங்கள்!.. எல்லாமே வேறலெவல்!..
பல வருடங்களுக்கு பின் கமலுக்கு விக்ரம் திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதன்பின் வெளியான தக் லைப் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. கல்கி படம் வெற்றி என்றாலும் அந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே கமலை காட்டினார்கள். இந்நிலையில், கமல்ஹாசன் அடுத்தடுத்து நடிக்கவுள்ள புதிய படங்களின் லிஸ்ட்டை பார்ப்போம்:
தர்மன் படத்திற்கு பின் கமலுடன் இணைந்து ரஜினி ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை நெல்சன் இயக்கவிருக்கிறார். ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் புரமோஷன் வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஜெயிலர் 2 ஹிட் அடித்திருக்கும் நிலையில் நெல்சனின் அடுத்த படமாக ரஜினி - கமல் இணையும் படம் இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
அடுத்து, சிந்துபாத், சித்தா, சேதுபதி, வீர தீர சூரன் ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் சண்டியர் என்கிற படத்தில் கமல் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.
அடுத்து, சண்டை பயிற்சி இயக்குனர்கள் அன்பு - அறிவு இணைந்து இயக்கவுள்ள புதிய படத்திலும் கமல் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும், கல்கி 2 படத்திலும் கமல் நடிக்கவிருக்கிறார். கல்கி 2ம் பாகத்தில் கமலுக்கு நிறைய கட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுபோக, ஒரு மும்பை நிறுவனம் தயாரிக்கவுள்ள ஒரு புதிய படத்திலும் கமல் நடிக்கவிருக்கிறார்.
