
Cinema News
கமலுடன் மோதிய அஜித் படங்கள்!.. ஜெயிச்சது தலயா?.. உலக நாயகனா?.. வாங்க பார்ப்போம்!.
Published on
By
பதினான்கு முறை ‘தல’ மற்றும் ‘உலகநாயகன்’ படங்கள் ஒரே நேரத்தில் வெள்ளித்திரையை தொட்ட வரலாறும் தமிழ் சினிமாவில் உண்டு. நடிப்பில் ராட்சஷனாக இருந்து வரும் கமலுக்கு தானும் சளைத்தவனில்லை என அஜித்குமார் நிரூபித்துக்காட்டியும் இருந்திருக்கிறார்.
பாலபாரதி இசையில் செல்வா இயக்கத்தில் வெளிவந்த ‘அமராவதி’ அஜீத்தின் முதல் தமிழ் படமாக இருந்து வரும் நிலையில் கமலின் “கலைஞன்” படம் வெளியான அதே நாளில்தான் இதுவும் வெளிவந்தது. அப்படி இருக்கையில் ‘கலைஞன்’ படம் வெற்றி வரிசையில் முந்திக்கொண்டது. அரவிந்த்சாமி, அஜீத் நடிப்பில் வெளியான ‘பாசமலர்கள்’, சந்தானபாரதியின் இயக்கத்தில் வெற்றியடைந்த “மகாநதி” படத்துடன் மோதியது. இதில் வெற்றி பெற்றது கமல்தான்.
இதையும் படிங்க: 22 வருடங்களுக்குப் பிறகு வரும் அழகி… படத்தோட வெற்றிக்கு பார்த்திபன் சொல்ற காரணத்த பாருங்க!..
பேராசிரியராக கமல் நடித்த ‘நம்மவர்’ படமும், அஜித்தின் ‘பவித்ரா’வும் ஒன்றாகவே வெளியானது. ‘குருதிப்புனல்’ படத்தோடு மோதியது அஜித்தின் ‘ஆசை’படம். இதில் ஆசை மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய, இவர்களின் இருவரின் முந்தைய மோதலில் ‘பவித்ரா’வே வெற்றியை தக்க வைத்தது. ஒருபுறம் ‘இந்தியன்’ படம் வெளியாகி மாபெரும் வெற்றியடைய அஜீத்தின் ‘மைனர் மாப்பிள்ளை’. ‘காதல் கோட்டை’ படங்களும் திரைக்கு வந்தது.
இதில் இந்தியன் மெகா ஹிட் ஆனது.
ஒரு காலத்தில் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்டு வந்த கமல்ஹாசனின் ‘காதலா காதலா’ படத்தோடு சரண் இயக்கத்தில் வெளிவந்த ‘காதல் மன்னன்’ படம் மோதியது. இதில் காதல் மன்னன் ஹிட் அடித்தது. அஜித்தின் “முகவரி” படத்தோடு கமலின் “ஹேராம்” படம் வெளியானது. தொடர்ந்து ‘ஆளவந்தானும்’, ‘சாம்ராட் அசோகாவும்’ ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது. இதில் அனைத்து படங்களுமே பெரிய ஹிட் அடிக்கவில்லை.
இதையும் படிங்க: விஜயகாந்தை வைத்து 18 படங்கள்!.. கேப்டனை ஸ்டாராக மாற்றிய எஸ்.ஏ.சந்திரசேகர்..
பம்மல் கே சம்மந்தம்’ படத்தோடு ‘ரெட்’ படமும் ‘ பஞ்சதந்திரம் படத்தோடு அஜித்தின் ‘ராஜா’ படமும் மோதியது. இதில் கமலுக்குதான் வெற்றி. ‘அன்பே சிவம்’ படத்துடன் போட்டியிடும் விதமாக வந்த ‘என்னை தாலாட்ட வருவாளா’ மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மும்பை எக்ஸ்பிரஸ் படமும் அஜீத்தின் ‘ஜி’ படமும் ஒரே நேரத்தில் வெளியானது. இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை.
இவர்கள் இருவருக்குமே வெற்றி படமாக அமைந்த ‘வேட்டையாடு விளையாடு’, வரலாறு’ படமும் ஒன்றாகவே வெளிவந்தது. ‘தூங்கா வனம்’ படம் ரசிகர்களை திரையரங்குகளில் தூங்க வைக்க, மிகப்பெரிய வெற்றியை கண்டது அஜீத்தின் ‘வேதாளம்’ படம். கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் வேதாளம் படத்தில் ஜோடியாக கைகோர்த்திருந்தார்.
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...