Categories: Cinema News latest news throwback stories

தெலுங்கு படம் நடிச்சிட்டு கமல்கிட்ட இதெல்லாம் எதிர்பார்க்கலாமா? – ஸ்ருதிக்கு அட்வைஸ் செய்யும் நெட்டிசன்கள்!..

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் வந்தவுடனேயே மிகவும் பிரபலமடைவார்கள். வரிசையாக பட வாய்ப்புகளை பெறுவார்கள் பிறகு வந்த வேகத்திற்கு காணாமல் போய்விடுவார்கள். அந்த வரிசையில் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனும் இடம் பெறுவார்.

தமிழில் ஸ்ருதிக்கு ஏழாம் அறிவு முதல் படமாக அமைந்தது. ஆனால் அதற்கு பிறகு வெளியான 3 திரைப்படம்தான் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து வரிசையாக வாய்ப்புகளை பெற துவங்கினார் ஸ்ருதி.

ஆனால் தமிழை விடவும் தெலுங்கு சினிமாவில் இவருக்கு அதிக வரவேற்பு இருந்தது. எனவே கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் இருந்து விலகி மொத்தமாக தெலுங்கு சினிமா பக்கம் சென்றுவிட்டார் ஸ்ருதி. தற்சமயம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு ஆசைப்படுகிறார் போல.

கமல் இன்னும் பார்க்கவில்லை:

தமிழ் யூ ட்யூப் சேனல்களிலுக்கு தற்சமயம் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார் ஸ்ருதி. தெலுங்கில் இரு முக்கிய நடிகர்களுடன் தற்சமயம் நடித்திருந்தார் ஸ்ருதி. பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி மற்றும் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா இரு படங்களிலும் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அந்த இரு படங்களையும் கமல்ஹாசன் பார்த்துவிட்டாரா? என்று ஸ்ருதிஹாசனிடம் கேட்டபோது இல்லை இன்னும் அப்பா அந்த இரு படங்களையும் பார்க்கவில்லை. என் தங்கை அக்‌ஷராஹாசனும் கூட இன்னும் எந்த படங்களையும் பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

சுமாரான தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு அதை கமல்ஹாசன் பார்க்க வேண்டும் என நினைப்பதே முதலில் தவறு என இதற்கு கருத்து தெரிவிக்கின்றனர் நெட்டிசன்கள்.

இதையும் படிங்க: அப்பா கஷ்டப்படுவதை பார்த்த விஜய்!.. அதனாலதான் அந்த விஷயத்துல அப்படி இருக்காராம்!…

Published by
Rajkumar