Categories: Cinema News latest news throwback stories

என் ரசிகர்கள் இப்படித்தான் இருக்கனும்.! உலகநாயகனை பார்த்து கத்துக்கோங்க.! முழு நீள பட்டியல் இதோ..

தனது ரசிகர்கள், தனது படங்கள் வரும் வேளையில் மட்டும் பாலபிஷேகம் செய்வது, கட்டவுட் ஏற்றுவது, முதல் நாளை கொண்டாடுவது தனது பிறந்தநாளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வது என்றிராமல் தனது ரசிகர்களும் தன்னை போல சிந்திக்க வேண்டும். தன் படங்கள் போலவே ஆக்கபூர்வமானவைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக நகர்பவர் கமல்ஹாசன்.

உண்மையில் அதுதான் நிஜம். தனது ரசிகர் மன்றங்களை , அரசியல் போராட்ட களத்தில் களமிறக்கியது. தனது ரசிகர் மன்றங்கள் மூலம் ரத்ததான , உடல் தான முகாம்கள் நடத்தி பலருக்கு உதவிகரமாக இருந்தவர் கமல்ஹாசன். உண்மையில், எது தேவையானதோ அதனை செய்ய வேண்டும் என நினைப்பவர் கமல்ஹாசன்.

இதையும் படியுங்களேன் – விஜய்யால் 8 டேக் போயிடுச்சி.! தயவு செய்து நடித்துவிடுவங்கள் சார்.! கெஞ்சிய இயக்குனர்.!

அதன்படி தான் மேற்கண்டவைகளை 80, 90 கால கட்டத்திலேயே செயல்படுத்தி காட்டியவர் உலகநாயகன். மேலும், அவருடைய படவிழாக்கள், சாதாரணமாக துதி பாடும் நிகழ்வாக அமையாது. மாறாக பெரிய எழுத்தாளர்கள், பேச்சாளர்களை வரவழைத்து அவர்களை பேச வைத்து, அவர்கள் மூலம் தனது ரசிகர்களும் கேட்டு பயன்பெற வேண்டும் என துடிப்பவர் கமல்ஹாசன்.

தற்போது அரசியல் களத்திற்குள்ளும் நுழைந்து விட்டார். பாரதிராஜா ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருப்பார். அதாவது கமல்ஹாசனை சீண்டாதீர்கள், பிறகு அவன் முழுதையும் கற்றுக்கொண்டு உங்களுக்கு மேலே நிற்பான். அப்படித்தான் சினிமா துறையில் அனைத்தையும் கற்றுக்கொண்டு தற்போது ஒரு ஜாம்பவான் போல நிற்கிறான். அரசியலில் அவனை இழுக்காதீர்கள் என கூறியிருப்பார்.

ஆனால், அவர் கூறியது தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நடைபெற்று வருகிறது. அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு வருகிறார் அரசியல்வாதி கமல்ஹாசன். போக போகத்தான் தெரியவரும் என்ன நடக்கிறது என்பது.

Manikandan
Published by
Manikandan