Categories: Cinema News latest news throwback stories

கமல்ஹாசன் கூறிய அந்த வார்த்தைகள்.. கண்ணீர் விட்ட விருமாண்டி நாயகி.. வெளியான வைரல் வீடியோ…

உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி அவரே கதாநாயகனாக நடித்து தயாரித்த திரைப்படம் விருமாண்டி. இந்த திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அபிராமி நடித்திருப்பார். அதன் பிறகு அவர்கள் தமிழில் பெரும்பாலான திரைப்படங்கள் நடிக்காமல் சினிமா விட்டு ஒதுங்கி விட்டார். என்றே கூறவேண்டும்.

அவ்வப்போது சிறு சிறு வேடங்களில் அபிராமி நடித்து வருகிறார். இவரைப் பற்றி அண்மையில் உலகநாயகன் கமல்ஹாசன் மிகவும் பெருமையாக ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

கமல் கூறியதாவது, ‘ அபிராமி அமெரிக்காவை சேர்ந்தவர். ஆனால், அவர் தென்னிந்திய தமிழை கற்றுக்கொண்டு, அவ்வளவு இயல்பாக விருமாண்டி திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக நடித்து இருந்தார். அவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். விஸ்வரூபம் திரைப்படத்தில் மீண்டும் அவரை தான் டப்பிங் பேசுவதற்கு நான் அழைத்தேன். அவருக்கும் எனக்குமான டப்பிங் பேச்சுக்கள் மிகவும் சர்வ சாதாரணமாக, அவ்வளவு அழகாக இருக்கும்.’ என்று மிகவும் அதிகமாக பாராட்டினார்.

இதையும் படியுங்களேன் – விஜய், அஜித் படத்துக்கு கூட இப்படி ஒரு சம்பவம் நடக்காது.! கார்த்தி செய்த சம்பவம் வேற லெவல் தான்…

இதனை போனில் பார்த்த அபிராமி, எவ்வளவு பெரிய உலக நாயகன் என்னைப் பற்றி இவ்வளவு புகழ்ந்து பேசுகிறார்கள் என்று சொல்வதற்கு வார்த்தை இல்லாமல் கண்ணீர் மூலம் தனது ஆனந்தத்தை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Manikandan
Published by
Manikandan