உலக நாயகனுக்கே விபூதி அடிக்கும் சிவகார்த்திகேயன் படக்குழு!.. இது எங்க போய் முடியுமோ!..

 
உலக நாயகனுக்கே விபூதி அடிக்கும் சிவகார்த்திகேயன் படக்குழு!.. இது எங்க போய் முடியுமோ!..
கமல்ஹாசன் திரையுலகில் பல வருடங்கள் பழம் தின்னு கொட்டை போட்டவர். பல வருடங்களாகவே தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். இதுவரை பல திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். இதில், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், விருமாண்டி, ஹே ராம், விக்ரம் ஆகிய முக்கிய படங்களாகும். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் மூலம் கிடைத்த லாபம் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு புது ரத்தத்தை பாய்ச்சியிருக்கிறது. இதனால், கமல்ஹாசனின் சம்பளமும் 150 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதையும் படிங்க: படம்தான் தக் லைஃப்!.. நிஜத்தில் காஸ்ட்லி லைஃப்!. மணிரத்னத்தின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?!.. இதனால் பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஹெச்.வினோத்துடன் ஒரு படம், மணிரத்னத்துடன் தக் லைஃப், தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் கல்கி ஆகிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதில் ஹெச்.வினோத் மட்டும் இன்னமும் துவங்கப்படவில்லை. ஒருபக்கம் சிம்புவை வைத்து ஒரு படம், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் என புதிய படங்களை தயாரித்து வருகிறார். இதில் சிம்பு படத்தின் முன் பணி தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. ஆனால், சிவகார்த்திகேயன் படம் 50 சதவீதத்திற்கும் மேல் முடிந்துவிட்டது. இதையும் படிங்க: ஆஸ்கார் மேடையில் ஆடையில்லாமல் வந்த அந்த பிரபலம்!.. இதெல்லாம் காமெடியா?.. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். முதல் முறையாக இப்படத்தில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அமரன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டீசர் வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது. உலக நாயகனுக்கே விபூதி அடிக்கும் சிவகார்த்திகேயன் படக்குழு!.. இது எங்க போய் முடியுமோ!.. அதேநேரம் இந்த படம் திட்டமிட்ட நாட்களை விட அதிகநாட்கள் படப்பிடிப்பு நடந்து பட்ஜெட் அதிகரித்துகொண்டே போகிறது. ஏற்கனவே பட்ஜெட்டை குறையுங்கள் என இயக்குனரிடம் கமல் சொல்லி இருந்தார். ஏனெனில், சொன்ன பட்ஜெட்டை விட 25 கோடி அதிகமாகிவிட்டது. இந்நிலையில் இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என இயக்குனர் சொல்ல கடுப்பாகி இருக்கிறாராம் கமல். இதையும் படிங்க: படம்தான் தக் லைஃப்!.. நிஜத்தில் காஸ்ட்லி லைஃப்!. மணிரத்னத்தின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?!..

From Around the web