×

ரஜினியை வாழ்த்தி கடுப்பில் டிவிட் போட்டாரா கமல்ஹாசன்? - வச்சு செய்யும் ரஜினி ரசிகர்கள்

 
ரஜினியை வாழ்த்தி கடுப்பில் டிவிட் போட்டாரா கமல்ஹாசன்? - வச்சு செய்யும் ரஜினி ரசிகர்கள்

திரைத்துறையில் சாதனை படைத்தவருக்கு மத்திய அரசு வழங்கும் சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 51வது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.இதற்கு முன்பு தமிழில் நடிகர் சிவாஜி மற்றும் இயக்குனர் பாலச்சந்தர் இந்த விருதுகளை பெற்றுள்ளனர். இந்த செய்தி தமிழ் திரைப்பட உலகினருக்கும், ரஜினியின் ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து ரஜினிக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ரஜினிக்கு போட்டி என கருதப்படும் நடிகர் கமல்ஹாசனும், ரஜினியின் நீண்டநாள் நண்பருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்’ என பதிவிட்டுள்ளார்.

இதில் ‘திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு’ என்கிற வாசகம்தான் இடிக்கிறது. அதாவது தன்னைப்போல் ரஜினிக்கு நடிக்க தெரியாது. தன்னைப் போல் நடனமாட தெரியாது. திரையில் தோன்றி ரசிகர்களின் விசில்களை பெற்று ரஜினி சூப்பர்ஸ்டாராக உயர்ந்துவிட்டார். தற்போது தாகா சாகேப் பால்கே விருதை பெற்றுவிட்டார் என்கிற கடுப்பில்ல்தான் கமல் இப்படி வஞ்சப் புகழ்ச்சியாக டிவிட் செய்துள்ளார் என நெட்டிசன்கள் பலரும் கமலை கிண்டலடித்து வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News