Kamal: சுந்தர்.சி போனாலும் குஷ்பு மேல கோபம் இல்ல!.. வைரலாகும் புகைப்படங்கள்!...
நடிகை குஷ்பூவுக்கு மிகவும் பிடித்த நடிகர் கமல்ஹாசன். டீன் ஏஜ் வயதில் கமலை சினிமாவில் பார்த்து நான் இவரை போல ஒருவரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்றெல்லாம் அவர் பெற்றோரிடம் சொல்லியதாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். கமலுக்கு ஜோடியாக மைக்கேல் மதன காமராஜன், சிங்காரவேலன் ஆகிய இரண்டு படங்களிலும் குஷ்பூ நடித்திருக்கிறார். இருவருக்கும் இடையே நல்ல நட்பும் உண்டு.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருந்ந்த படத்தில் திடீரென சுந்தர்.சி இயக்குனராக அறிவிக்கப்பட்டார். அதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதைத்தொடர்ந்து ‘எனது இரண்டு ஹீரோக்களும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள்’ என சமூகவலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்தார் குஷ்பு. ஆனால் அதே குஷ்புதான் தனது கணவர் சுந்தர்.சி இந்த படத்திலிருந்து விலகுகிறார் என்கிற செய்தியையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். கமல் கேட்டுக்கொண்டதால் உடனே அதை நீக்கியும்விட்டார்.

சுந்தர்.சி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்காமல் போனதால்தான் இந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே புதிய இயக்குனரை தேடும் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. ரஜினியின் புதிய படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்து விடும். தன்னிடமும் ரஜினியிடமும் முறையாக தெரிவிக்காமல் சுந்தர்.சி இந்த படத்திலிருந்து வெளியேறியது கமலுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்நிலையில்தான் கமலின் அண்ணன் மகள் சுகாசினி, குஷ்பு மற்றும் கமல் ஆகிய மூவரும் ஒரு பேருந்தில் ஒன்றாக பயணிக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இது விமான நிலையத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது. ஏனெனில் விமான நிலையத்திலிருந்து கமலும், குஷ்புவும் வெளியே வரும் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. இதை பார்க்கும்போது சுந்தர்.சி மீது கோபம் இருந்தாலும் குஷ்புவுடன் கமல் நன்றாகவே பழகுகிறார் என்பதை காட்டுகிறது.
