×

டாட்டா காட்டிய கமல்...மாஸ்டர் படத்தால் ஒதுக்கப்படும் லோகேஷ்...  

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதிக்கு இருந்த அதிக முக்கியத்துவத்தால் கமல் பெரும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.
 
டாட்டா காட்டிய கமல்...மாஸ்டர் படத்தால் ஒதுக்கப்படும் லோகேஷ்...

விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இப்படத்தை இயக்கிக் கொண்டிருந்த போதே, கமலின் விக்ரம் படத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியது. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் கூட துவங்கவில்லை. தொடர்ந்து, கமலும் ஆபரேஷன் செய்து வீட்டில் இருந்தார். தற்போது சட்டசபை தேர்தலில் பிஸியாக இருக்கிறார். ஆனால் இந்த காரணங்களை விட கமலுக்கு லோகேஷுடன் படம் செய்வதில் ஆர்வம் இல்லை எனத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மாஸ்டர் படத்தில் விஜயிற்கு கொடுத்த மாஸை விட விஜய் சேதுபதியை அதிக மாஸா காட்டி இருந்தார். இதனால் அது விஜய் சேதுபதி படம் என்றே பலர் கூறினர். எப்போதுமே ஹீரோவுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் கமல்ஹாசன் இந்த ட்ரெண்டை விரும்பவில்லை. 

இந்நிலையில், கமல் தேர்தல் முடிந்ததும் சிகப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாரதிராஜா இயக்க இருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஸ்ரீதேவி போன்று திறமையான நடிகையை நடிக்க வேண்டும் என கமல் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை தேர்தல் முடிந்தவுடன் வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News