×

கமலின் விக்ரம் அப்டேட்....
தந்தையுடன் இணைகிறாரா, சுருதிஹாசன்?

 
vikram 2

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனுடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது. சுருதிஹாசனும் தந்தையுடன் இணைந்து நடிக்க உள்ளாராம். 
இது ஒரு அதிரடி ஆக்ஷன் கலந்த படம். கூடவே அதிரடியான அரசியலும் இப்படத்தில் உண்டு. தற்போது இப்படத்தில் சுருதிஹாசன் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. கமல்ஹாசன் மற்றும் லோகேஷ்கனகராஜ் இணையும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் டீசர் தான். தனது அரசியல்களத்தையும் மற்றுமொரு காரணமாகச் சொல்லலாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் கமல் ஒரு இடத்தைக் கூட பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

logesh

கொரோனா 2வது அலை குறைந்த பின்னர் விக்ரம் படத்தில் கமல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த லாக்டவுன் பீரியடில் கதையில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாவும் தெரியவருகிறது. தற்போது விக்ரம் படத்தில் நடிக்க உள்ள முக்கிய நடிகர்கள் பற்றி விவரம் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே இந்த படத்தில் மலையாள நடிகர்கள் பகத் பாசில் மற்றும் ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது ஆண்டனி வர்கீஸ் மாஸ்டர் படத்திலேயே நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் மலையாள படங்களில் அப்போது அவர் பிசியாக இருந்ததால் அவரால் நடிக்க முடியாமல் போனது. அடுத்து விக்ரமில் நடிக்க உள்ள அவருக்கு முக்கிய கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து கமல்; மகள் சுருதிஹாசன் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அவரோ, எனக்கு விக்ரம் படத்தில் நடிக்க அழைப்பு வரவில்லை என்று கூலாக கூறிவிட்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News