ஆங்கருக்கு பளார்னு அடி! கேள்வி கேட்ட நிருபருக்கு ஷாக் கொடுத்த கங்கை அமரன்
தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக இயக்குனராக பாடலாசிரியராக பாடகராக என பன்முகத்திறமைகள் வாய்க்கப்பெற்ற ஒரு கலைஞராக திகழ்ந்து வருபவர் கங்கை அமரன் .தற்போது நடிகராகவும் புது அவதாரம் எடுத்திருக்கிறார். லெனின் பாண்டியன் படத்தின் மூலம் கதையின் நாயகனாக புது அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் பழம்பெரும் நடிகர் சிவாஜிகணேசனின் பேரன் தர்ஷனும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
படத்தின் ப்ரோமோஷனுக்காக கங்கை அமரனை பேட்டி காணும் போது தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் கங்கை அமரன். குறிப்பாக தான் நடிகராக மாறியது அதிலும் இந்த வயதில் நடிகராக மாறியது எனக்கு மிக சந்தோஷம் என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தில் ரோஜா தனக்கு ஜோடி என்று சொன்னதும் பிறவிப்பயனை அடைந்த ஒரு உணர்வு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
என்னுடைய அடுத்த ஜோடி ஐஸ்வர்யா ராய்தான். இன்னும் அடுத்தடுத்து நான் பிரபலமாகிவிடுவேன். பல நடிகைகள் எனக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் கங்கை அமரன். இவ்வளவு கலகலப்பாக பேசும் நீங்கள் ஏன் பொது இடத்தில் மட்டும் அவ்வப்போது டென்ஷனாகி கத்திவிடுகிறீர்கள் என கங்கை அமரனை பார்த்து தொகுப்பாளினி கேட்டார்.
நீ சமீபத்தில் நடந்த விஷயத்தை பற்றித்தானே கேட்குற? ஆமா.. ஒரு விழாவிற்கு போனோம். ஏகப்பட்ட பேர் புகைப்படம் எடுக்கணும்னு வர்றாங்க. எவ்வளவு நேரம்தான் நானும் சிரிச்சுக்கிட்டே போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறது? வெளியில் வந்தால் செய்தி பத்திரிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள். அதில் பின்னாடி ஒருத்தன் முகத்தை காட்டியபடி நிக்குறான். அவனை முன்னாடி இழுத்து வந்து பேசுனு சொன்னேன்.

அவனும் அவன் பேச்சை தொடங்குனான். உடனே பத்திரிக்கையாளர்கள் அவர பேச சொல்லுங்க என்று சொன்னார்களா இல்லையா? இது மட்டுமில்ல. தேவையில்லாத கேள்வியை கேட்டால் சில ஆங்கரை அடிச்சிருக்கிறேன். ஆனால் அதை பப்ளிஸ் பண்ணல.அதனால் நீயும் சரியான கேள்வியை கேளு. இல்லைனா அடி விழும் என கூறினார். உடனே அந்த தொகுப்பாளினி அதுக்குத்தான் இவ்வளவு தூரமா உட்காந்திருக்கிறேன் என்று கூறினார்.
தூரமா இருந்தால் என்னால் எழுந்து வர முடியாதா என்று மாறி மாறி அந்த தொகுப்பாளினியை பயமுறுத்திக் கொண்டே இருந்தார் கங்கை அமரன். மேலும் என் அண்ணன் செய்தித்தாள் சோசியல் மீடியா இதெல்லாம் பார்க்க மாட்டார். அதனால் அவர் இப்படி டென்ஷனாக மாட்டார். நான் தான் இப்படி இருப்பேன். அதனால்தான் என் அண்ணன் என்னிடம் ‘வெளியில் பார்த்துபேசு. நீ கோபத்துல கத்துனா என் மூலமா நீ பேசுறனு சொல்லுவாங்க. அதனால் கொஞ்சம் நிதானமா பேசு’ என சொல்லுவாராம் இளையராஜா. இதை கங்கை அமரன் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
