×

பிச்சைக்காரி போல இருக்காதீங்க... என்னப்பாத்து கத்துக்கோங்க... நார்த் மீரா மிதுனின் காமெடி
 

நடிகை கங்கனா ரனாவத்தின் சமீபத்திய ட்விட்டர் போஸ்ட் மீண்டும் சர்ச்சையாகி இருக்கிறது.
 
 
பிச்சைக்காரி போல இருக்காதீங்க... என்னப்பாத்து கத்துக்கோங்க... நார்த் மீரா மிதுனின் காமெடி

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். சக நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் இறப்பில் முதல் ஆளாக குரல் கொடுத்தார். அப்போது அவருக்கு ரசிகர்கள் செம வரவேற்பு கொடுத்தனர். ஆனால், விவசாயிகள் போராட்டத்தில் அம்மணி அடித்த ஓவர் ஸ்டண்டில் செம பல்ப் வாங்கினார் என்றே சொல்ல வேண்டும். தற்போது அவரை தான் ரசிகர்கள் பலவாறு கலாய்த்து வருகின்றனர். கங்கனாவும் அதற்கேற்றார் போல போஸ்ட் போட்டு வாங்கி கட்டி கொள்கிறார். 

சமீபத்தில் உத்தரகாண்ட் மாநில முதல்வர் கிழிந்த ஜீன்ஸ் போட்டவரால் சமூகத்தில் நல்ல தாக்கத்தை எப்படி உருவாக்க முடியும் எனப் பேசி இருந்தார். அந்த சர்ச்சையான பேச்சை கண்டிக்கும் விதமாக, நடிகைகளும் இளம் பெண்களும் கிழிந்த ஜீன்ஸ் போட்டு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதே கண்டனத்தை கங்கனா தெரிவிக்க அது இன்னும் சர்ச்சையை கிளப்பியது. அவர் வெளியிட்ட ட்வீட்டில், உங்களுக்கு கிழிந்த ஜீன்ஸ் அணிய விருப்பம் ஏற்பட்டால் இந்த புகைப்படத்தில் இருப்பது போல ஸ்டைலாக அணியுங்கள். அப்போது தான் உங்களுக்கு ஸ்டைலாக இருக்கும். இல்லையென்றால், உங்கள் மாநில வீடில்லாத பிச்சைக்காரர்கள் போல் இருக்கும். இளசுகள் பலர் தற்போது இப்படித்தான் அணிகிறார்கள் எனப் பதிவிட்டார். 

இந்த பதிவு வைரலான நிலையில், பலரும் கங்கனாவை கலாய்த்தனர். ஒரு சிலர் ஆலியா பட், சாரா அலிகான், ப்ரியங்கா சோப்ரா படங்களை பகிர்ந்து இவர்களை தானே சொல்லுறீங்க என சிக்கலில் இழுத்து விட்டு வருகின்றனர். அம்மணிக்கு கையு சும்மா இருக்காது போல!
 

From around the web

Trending Videos

Tamilnadu News