×

திரையுலக மாபியா கும்பலின் தலைவரே அவர்தான் - கங்கனா ரனாவத் டிவிட்

நடிகை கங்கனா ரனாவத்தின் புகார் பாலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 

பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட போது, பாலிவுட் திரையுலகில் இருக்கும் நெப்போட்டிசமே காரணம் என பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பகீரங்க புகார் கூறினார். சுஷாந்தின் மரணத்திற்கு பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர், சல்மான்கான் உள்ளிட்ட பலரையும் அவர் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் ‘பாலிவுட் திரையுலக மாபியா கும்பலில் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தான் முக்கிய குற்றவாளி. பலரது வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் சிதைத்தவர் சுதந்திரமாக நடமாடுகிறார்’ என டிவிட் செய்துள்ளார். மேலும், அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமர் மோடிக்கும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரண் ஜோஹர் மீதான கங்கனாவின் குற்றச்சாட்டு பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News