×

காங்கிரஸே பிடிக்காது... இருந்தும் இந்திரா காந்தி வேடமேற்ற முன்னணி நடிகை

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பயோபிக்கில் நடிக்க இருக்கிறார். 
 

சுஷாந்த் சிங் இறப்புக்குப் பின்னர் நடிகை கங்கனா தெரிவித்து வரும் கருத்துகள் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. பிஜேபியின் தீவிர ஆதரவாளரான கங்கனா, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. 


காங்கிரஸை விளாசித்தள்ளும் கங்கனா, இப்போது அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரும், மறைந்த பிரதமருமான இந்திரா காந்தியின் பயோபிக்கில் நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் அறிவித்திருக்கும் கங்கனா, ``அரசியல் சார்ந்த படம் ஒன்றுக்காக நானும், எனது நண்பர் சாய் கபீரும் இணைகிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. இந்தப் படத்தை மணிகர்ணிகா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கதை, திரைக்கதை எழுதி சாய் கபீர் இயக்குகிறார்’’ என்று அறிவித்திருக்கிறார். 


ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், எந்தப் புத்தகம் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஸ்கிரிப்ட் வேலைகள் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தப் படத்தை கங்கனாவே தயாரிக்கிறார்.  


 

From around the web

Trending Videos

Tamilnadu News