×

கங்கனா ரணாவத் மீது கிரிமினில் வழக்கு - வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்கணும்!

 

நடிகர் சுஷாந்த் தற்கொலையை தொடர்ந்து பாலிவுட்டில் மாபியா கும்பல் செயல்படுவதாகவும், சினிமா நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமாக போதை மருந்து புலங்குவதாகவும் நடிகை கங்கனா ரணாவத் பரபரப்பை புகாரை கூறியிருந்தார். 

மேலும், மும்பை பாதுகாப்பற்ற நகரமாக மாறிவருவதாக நடிகை கங்கனா ரணாவத் கூறியிருந்தார். எனவே, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவாத்திற்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.  கங்கனா மும்பை வந்தால் அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்படும் என அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ‘நான்  மும்பை வருவேன். முடிந்தால் தடுத்துபாருங்கள்’ என கங்கனா கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து கங்கனாவுக்கு மத்திய அரசு ஒய் இசட் பாதுகாப்பு அளித்துள்ளது.

அதன்பின் பாந்திரா, பாலிஹில்லில் உள்ள கங்கனா ரணாவத்தின் பங்களா வீட்டில் சட்டவிரோதமான கட்டுமான பணிகள் நடப்பதாக மும்பை மாநகராட்சி ஊழியர்கள் இடித்து தள்ளினர். இதைத்தொடர்ந்து அவர் மும்பையிலிருந்து வெளியேறினார். மேலும் தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துவருகிறார்.

சமீபத்தில், பஜாக அரசு கொண்டுவந்த வேளான் சட்ட மசோதாவுக்கு அவர் ஆதரவு தெரிவித்தார். மேலும், இந்த சட்டத்தை எதிர்ப்பவர்களை தீவிரவாதிகள் எனவும் விமர்சித்திருந்தார். இதையடுத்து, கர்நாடகாவில் வழக்கறிஞர்  ரமேஷ் நாயக் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News