Kanguva2
நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று கங்குவா படம் வெளியாகியது. கங்குவா படத்தை வீடியோ கேம் என்று சொன்னார்கள். அப்படின்னா குழந்தைகளுக்குப் பிடிச்ச படம் என்கிறதால தான் அன்றைய தினம் வெளியிட்டுள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
Also read: Biggboss Tamil 8: இந்த வாரம் ‘வெளியேறியது’ இவர்தான்?
கங்குவா படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். சூர்யாவின் முற்றிலும் மாறுபட்ட கெட்டப் வழக்கம்போல இந்தப் படத்திலும் உள்ளது. ஆனால் போட்ட உழைப்புக்கு ஏற்ற பலன் தான் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.
இரைச்சல்
Kanguva
இந்தப் படத்தின் திரைக்கதை சரியாக அமையவில்லை என்பதும், படத்தில் ஒரே இரைச்சல் தான் என்றும் இதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது. படத்தின் இரைச்சல் அதிகமாக இருந்ததால் ஞானவேல் ராஜா 2 புள்ளிகளைக் குறைக்கச் சொல்லி அனுமதி அளித்து இருந்தார்.
அதன்பிறகாவது கூட்டம் வருகிறதா என்று பார்த்தால் ஏமாற்றம் தான். கமெண்ட் பாக்ஸில் ஆட்டோவில் கண்ணாடியைத் திருப்புனா ஓடுமா என்று நெட்டிசன்கள் அவரைக் கலாய்த்தும் வருகின்றனர்.
3 நாள் வசூல்
அந்த வகையில் கங்குவா படத்திற்கான வசூல் கடந்த 3 நாள்களாக எந்தநிலையில் உள்ளது என்று பார்ப்போம். இந்திய அளவில் பார்த்தால் முதல் நாள் 24 கோடியும், 2வது நாள் 9.25 கோடியும், 3வது நாள் முன்கூட்டியே எடுத்த கணக்கின்படி 9.50 கோடியும் என மொத்தம் இதுவரை 42.75 கோடி வசூலாகி உள்ளது.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்
உலகளவில் இந்தப் படம் 11500 தியேட்டர்களில் ரிலீஸாகி உள்ளன. அந்த வகையில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் உலகளவில் முதல் 2 நாள்களாக கங்குவா படம் 89.32 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
100 கோடி
இந்த நிலையில் சவுண்டு குறைக்கப்பட்ட பிறகும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கூட பெரும்பாலான திரையரங்குகளில் இருக்கைகள் காலியாகத் தான் கிடந்ததாம். 100 கோடியைக் கூட இன்னும் நெருங்கவில்லை. 3வது நாள் சேர்த்துப் பார்த்தால் 100 கோடி வந்திருக்கலாம்.
அமேசான் பிரைம் ஓடிடி
Also read: விஜயை பார்த்து கத்துக்கோங்கப்பா! பாடாய்படும் கங்குவா.. வீர வசனம் பேசினா இப்படித்தான்
அதே நேரம் படத்தின் பட்ஜெட் 350 கோடி என்று கூறப்பட்ட நிலையில் படம் தேறுவது ரொம்ப கஷ்டம் தான் என்று கூறுகின்றனர். பொங்கலுக்கு அமேசான் பிரைம் ஓடிடியில் கங்குவா வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
TVK Vijay:…
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…