sivakumar jothika
Kanguva: கங்குவா படத்தின் தோல்வியை தொடர்ந்து சூர்யா குடும்பம் மொத்தமாக மாறி இருப்பதாக தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகிறது.
நடிகர் சூர்யா தன்னுடைய மொத்த குடும்பத்துடன் மும்பை பக்கம் குடிபெயர்ந்தார். ஜோதிகாவின் அப்பா அம்மாவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த மாற்றம் என கூறப்பட்டாலும் சூர்யாவின் பாலிவுட் கனவுக்காக தான் இந்த முடிவு என தகவல்கள் வெளியானது.
இதையும் படிங்க: சமரச பேச்சுவார்த்தை!.. நேரில் ஆஜரான ஜெயம் ரவி-ஆர்த்தி ரவி?!… மீண்டும் இணையுமா இந்த ஜோடி?…
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பின்னர் கோலிவுட்டில் நடிகர் சூர்யா பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்னும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்தார். அது ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
தொடர்ச்சியாக பாலிவுட்டில் வாய்ப்பு தேடி வந்தவருக்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் கர்ணன் படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தது. அப்படத்தை பிரபல இயக்குனர் ஓம்பிரகாஷ் இயக்க இருந்தார். ஆனால் தற்போது கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் சூர்யாவை வைத்து இந்த படத்தை இயக்க அவர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா சமீப காலமாக கோயில்களில் அதிகமாக காணப்படுகிறார். அது மட்டுமல்லாமல் அவருடைய மனைவி ஜோதிகாவும் அடிக்கடி கோவில்களை விசிட் அடித்து வருவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை ஜோதிகா கோயில்களுக்கு செலவு செய்ததற்கு பதில் மருத்துவமனைகளை கட்டலாம் என பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக மாறியது.
இது மட்டுமில்லாமல் நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் திருப்பதி குறித்து சர்ச்சையாக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏழை ஒருவன் கஷ்டப்பட்டு காடுகளை சுற்றி கோயிலுக்குள் வந்தால் அவனை துரத்தி விடுகின்றனர்.
இதையும் படிங்க: புஷ்பா 2 நிகழ்ச்சியில் பொங்கிய தேவி ஸ்ரீ!.. எதுக்கு அப்படி பேசினாரு?!.. தயாரிப்பாளர் விளக்கம்..!
ஆனால் பணக்காரன் ஒருவன் மனைவிக்கு தெரியாமல் குமரியை அழைத்துக் கொண்டு கெஸ்ட் ஹவுஸில் ரூம் எடுத்து நைட்டெல்லாம் சரக்கடித்து, சந்தோஷமாக இருந்து குளிக்காமல் கோயிலுக்கு வந்தால் அவனுக்கு கும்ப மரியாதை செய்கின்றனர் எனப் பேசி இருக்கிறார். தற்போது சிவகுமாரின் இந்த வீடியோவுடன் ஜோதிகா கோயிலுக்கு செல்லும் வீடியோக்கள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
வீடியோவிற்கு: https://x.com/Senthil_TNBJP/status/1861792088947318825
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…