மெகா பிளாக்பஸ்டர் ஹிட்டா?... 2-வது நாளில் இத்தனை கோடி வசூலா?... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!..
Nov 16, 2024, 22:01 IST
கங்குவா திரைப்படம் 2-வது நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது தொடர்பான தகவலை படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். நடிகர் சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் கடந்த 2 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்தது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். இதையும் படிங்க: அடேங்கப்பா… சந்திரமுகி அரண்மனைக்கு ஒரு நாள் வாடகை இவ்ளோ ரூபாயா? வேற என்னென்ன ஸ்பெஷல்னு பாருங்க… சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் சர்வதேச அளவில் 11,500 திரையரங்குகளில் ரிலீஸாகி இருந்தது. பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படத்திற்கு பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றது. சமூக வலைதள பக்கங்களில் கங்குவா திரைப்படத்தை ட்ரோல், மீம்ஸ் என்று பங்கம் செய்து வருகிறார்கள். சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படத்திலேயே இந்த அளவுக்கு விமர்சனத்தை சந்தித்த திரைப்படம் கங்குவா தான். அதற்கு முக்கிய காரணம் படக்குழுவினர் கொடுத்த ப்ரோமோஷன் தான்.
கடந்த ஒரு மாதமாக படம் குறித்து மேடைக்கு மேடை மைக்கை பிடித்துக் கொண்டு தயாரிப்பாளரும், நடிகர் சூர்யாவும் ஓவர் பில்டப் கொடுத்திருந்தார்கள். ஆனால் படத்தில் கதையே இல்லை என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. அதிலும் படத்தின் சவுண்ட் மிகப்பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் கங்குவா திரைப்படத்தின் வசூல் குறித்த விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றது. கங்குவா படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் முதல் நாளில் 58.60 கோடி வசூல் செய்துள்ளதாக ஸ்டூடியோகிரீன் நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இரண்டாவது நாள் வசூல் குறித்த அறிவிப்பை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இதையும் படிங்க: இரு பக்கமும் பணத்தால் வந்த இடி!… நயன்தாரா திடீரென பொங்கியதற்கு இதுதான் காரணமா?!… அதன்படி 2-ம் நாள் வசூல் சர்வதேச அளவில் 89.32 கோடி என்று தெரிவித்துள்ளது. படம் ஒரு வாரம் கூட திரையரங்குகளில் ஓடாது என்று தொடர்ந்து விமர்சனம் எழுந்து வந்த நிலையில் இரண்டு நாட்களிலேயே படம் 100 கோடியை நெருங்கிவிட்டது என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதை பார்த்த ரசிகர்கள் படத்தின் வசூலையும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.