Categories: Cinema News latest news

கங்குவா படத்துல வர்ற ரெட்ரோ சீன்ஸ் எல்லாம் எங்கே எடுத்தாங்கன்னு தெரியுமா? திரில்லிங்கான இடமாச்சே!

ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த பிரம்மாண்டமான படம் கங்குவா. படத்திற்காக பலரும் கடுமையாக உழைத்துள்ளனர். கோவா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து, பாங்காக், ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி என பல இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்துக்கா விஎப்எக்ஸ், சிஜி வேலைகள்ல ரொம்பவே மெனக்கிட்டுள்ளனர். சூர்யா ரொம்பவே கஷ்டப்பட்டு நடிச்ச படம்.

kodaikanal

முற்றிலும் மாலறுபட்ட இரட்டை வேடம் அவருக்கு. திஷா பதானி, யோகிபாபுவும் நடித்துள்ளனர். கார்த்தி கேமியோ ரோலில் நடித்துள்ளார். ஆனா இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள் அசுரத்தனமானவை.

படத்தில் பாபிதியோல் கொடூர வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை தேவிஸ்ரீபிரசாத். படத்தின் முதல் அரை மணி நேரம் ஒரே இரைச்சலாக உள்ளது என்றனர். அதனால் சவுண்ட்ல 2 புள்ளிகளையும் குறைத்துப் பார்த்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை.

Also read: வெளியேறிய டிஎஸ்பி… குட் பேட் அக்லியில் எண்ட்ரியாகும் முக்கிய பிரபலம் இவர்தானாம்!… சம்பவம் பண்ணலாமா?

நெகடிவ் விமர்சனங்கள் தான் நிறைய வந்தன. இந்தப் படத்தைப் பற்றி தற்போது ஒரு தகவல் வந்துள்ளது. இந்தப் படத்தில் வரும் சில முக்கிய காட்சிகள் கொடைக்கானலில் எடுத்தார்களாம். அதுவும் திரிலிங்கான இடம் என்கிறார்கள். என்னன்னு பார்க்கலாமா…

kanguva

கங்குவா படத்துல வர்ற எல்லா ரெட்ரோ சீன்ஸ்சும் கொடைக்கானல்ல தான் எடுத்தாங்க. அதோட பேரு தின்னவரா. இது கொடைக்கானலில் உள்ள உயரமான மலைக்குன்றுகளில் ஒன்று.

இந்த மலையைச் சுற்றி நைட் ஜீப் சவாரி போன ரொம்பவே அட்வென்சரா இருக்கும். கொடைக்கானல் வந்துட்டு ஒரே இடத்துக்குப் போகாம இந்த ஜீப் சவாரியை ட்ரை பண்ணுங்க. அப்ப தான் அட்வென்சர்னா என்னன்னு தெரியும்.

இந்தப் படத்தில் நடித்த நட்டியும் கொடைக்கானல்ல செட் போட்டு திருமணத்தான், பெருமாச்சி சீனை எடுத்தது குறித்து இப்படி சொல்கிறார். கொடைக்கானலோட உயரமான இடம். அங்க செட் போட்டு எடுத்தோம். அங்கே 5 நிமிஷத்துக்கு ஒரு தடவை மழை அடிக்கும். கிளவுடு வரும்.

Also read: கங்குவா படத்தின் முதலை ஃபைட் சீன்!.. பிரம்மாண்டமா இருக்கே!.. இதுக்கு பின்னாடி இவ்வளவு உழைப்பா?!..

நான் கொஞ்சம் பரிதாபப்பட்டே பார்த்தேன் என்கிறார். சிறுத்தை சிவா கொடைக்கானல் முழுவதும் தமிழ்க்கடவுள் முருகனின் அருளால தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து இருக்கு. இயற்கையும் கடவுளும் அருள் புரிந்தால் தான் நம்மோட ஒர்க் நடக்கும் என்றார் சிறுத்தை சிவா.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v