Connect with us

latest news

கங்குவா படம் பார்த்தவர்களுக்கு நிவாரண தொகை… இத யாருமே கவனிக்காம விட்டீங்களே!…

Kanguva: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படத்தில் ஏற்பட்ட முறையீட்டால் படம் பார்த்தவர்களுக்கு நிவாரணத் தொகை கொடுக்கப்பட வேண்டும் என பிரபல அரசியல் விமர்சனம் மாரிதாஸ் தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் திரைப்படம் கங்குவா. இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் பாபி தியோல், திஷா பதானி, கருணாஸ், கலைராணி உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பு செய்திருந்தார்.

இதையும் படிங்க: நீங்க என்ன சமூகசேவைக்கா கேட்குறீங்க? சும்மா எதுக்கு இந்த திடீர் நாடகம்.. தனுஷ் ரசிகர்களிடம் சிக்கிய நயன்…

இப்படம் வெளிவருவதற்கு முன்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. புரமோஷன் பணிகளுக்காக நடிகர் சூர்யா தொடர்ச்சியாக மாநிலம் மாநிலமாக பயணம் செய்து வந்தார். ஆனால் படம் வெளியான முதல் நாளில் இருந்து தொடர்ச்சியாக நெகட்டிவ் விமர்சனங்களே குவிந்து வருகிறது.

படத்திற்கு இருக்கும் எல்லா கேரக்டருமே கத்திக்கொண்டு இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் படம் பார்த்தவர்களுக்கு தலை வலி வந்தது தான் மிச்சம் என பலரும் கருத்து தெரிவித்தனர். இதனால் படத்தின் வசூலும் பெரிய அளவில் பாதித்தது. படத்தில் கதையை யோசிக்கும் அளவுக்கு கூட ரசிகர்களை விடாமல் கேரக்டர்கள் ஒரு பக்கம் கத்த, தேவி ஸ்ரீ பிரசாதின் இசை ஒரு பக்கம் சோதித்தது.

நேற்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா திரையரங்கினரிடம் படத்தின் சத்தத்தை இரண்டு பாயிண்ட் குறைக்க சொல்லி இருப்பதாக தகவல்கள் வந்தது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் மாரிதாஸ், கங்குவா படத்திற்கு 105 dB சத்தத்திற்கு மேல் வைத்திருந்தாக தகவல் வந்துள்ளது.

இதையும் படிங்க: உங்க புருஷர் பண்ணதை மறந்துட்டீங்களா நயன்!.. NOC மறுக்கப்பட்டதன் உண்மை பின்னணி…

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top