பல வருடங்களாக சினிமா பத்திரிக்கையாளராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். பல திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
சமீபகாலமாக இவர் பல யுடியூப் சேனல்களில் நடிகர்கள், நடிகைகள் பற்றிய அந்தரங்கான தகவல்களை தெரிவித்து வருகிறார். பொதுவாக நடிகைகள் பற்றி என்ன கூறினாலும் ரசிகர்கள் அதை நம்புவார்கள் என்பதால் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார். நடிகைகளின் கள்ள உறவு வைத்திருப்பவர்கள், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வார்கள் என்றுதான் அதிகம் பேசுவார்.
இந்நிலையில், ஃபைவ் ஸ்டார், வரலாறு ஆகிய படங்களில் நடித்த கனிகா கணவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என சமீபத்தில் அடித்துவிட்டார் ரங்கநாதன்.
இது கனிகாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் கணவர் மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். பொதுவாக நான் எதற்கும் ரியாக்ட் செய்ய மாட்டேன். ஆனால், இவரின் பேச்சு என் வயிற்றை எரிய வைத்துள்ளது. மூன்றாம்தர பத்திரிக்கையாளர்களை எப்போதும் நான் கண்டுகொள்வது இல்லை.
திரைப்படத்துறையில் இருக்கும் எல்லா பெண்களையும் மோசமாக விமர்சிக்கிறார். அந்த யுடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்தவர்கள் இவர் கூறுவதை எல்லாம் நம்புவார்கள் என நினைக்கும் போதுதான் கவலையாக இருக்கிறது. இவரை நான் எப்படி ரிப்போட் செய்வது?.. எனக்கு அழகான வாழ்க்கை இருக்கிறது. ரசிகர்களின் அன்பும் ஆதரவும் எனக்கு எப்போதும் இருப்பதற்கு நன்றி’ என இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…