×

உள்ளாடை குறித்து கேள்வி கேட்ட நபர்...  போல்ட் ஆக பதிலளித்த அஜித் பட நடிகை....

உள்ளாடை குறித்து விஸ்வாசம் பட நடிகை அனிகா சுரேந்திரன் தெரிவித்த பதில் பாராட்டை பெற்றுள்ளது.
 
anikha
ஹைலைட்ஸ்:
அந்த நபர் நீங்கள் எந்த வகையான பிராவை பயன்படுத்துகிறீர்கள். இதில் எனக்கு உங்களின் கருத்து வேண்டும் என்று கேட்டிருந்தார்

சினிமாவைப் பொருத்தவரை ஹீரோயின்கள் எந்த அளவிற்கு பிரபலமாக உள்ளார்களோ அவர்களை விட குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நடிகைகள் மிகவும் பிரபலமாக வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் குறிப்பிட்டுக் கூற வேண்டுமென்றால் தெய்வத்திருமகள் படத்தில் அறிமுகமான நடிகை சாரா, தங்கமீன்கள் படத்தில் அறிமுகமான சாதனா, என்னை அறிந்தால் படத்தில் அறிமுகமான அனிகா மிகவும் பிரபலமாக உள்ளார்கள். 

இதில் குறிப்பாக என்னை அறிந்தால் படம் மூலம் அறிமுகமான அனிகா சுரேந்தர் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இதனையடுத்து மீண்டும் அஜித் நடிப்பில் உருவான விசுவாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்து மேலும் பிரபலமடைந்தார். விஸ்வாசம் படத்தில் நயன்தாராவிற்கு மகளாக நடித்ததாலோ என்னவோ தற்போது குட்டி நயன்தாராவாகவே மாறி வருகிறார்.

Anikha

அனிகாவிற்கு வயது என்னவோ குறைவுதான். ஆனால் இவரது போட்டோ ஷூட் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இருக்கும். இவரது போட்டோக்களுக்காகவே சமூக வலைதளங்களில் இவரை ஏராளமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர். தொடர்ந்து போட்டோக்களை பதிவிட்டு வந்ததன் பலனாக தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனிகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகரின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருக்கும்போது ரசிகர் ஒருவர் உள்ளாடை குறித்து கேள்வி கேட்டிருந்தார்.

anikha

அந்த நபர் நீங்கள் எந்த வகையான பிராவை பயன்படுத்துகிறீர்கள். இதில் எனக்கு உங்களின் கருத்து வேண்டும் என்று கேட்டிருந்தார். இதற்கு சற்றும் முகம் சுழிக்காமல் பதில் அளித்த அனிகா, நீங்கள் சரியான சைஸ் உள்ள காட்டான் பிராவை பயன்படுத்த நான் சிபாரிசு செய்கிறேன். நான் Zivame போன்ற இணையதளங்களில் ஆன்லைன் மூலம்தான் பிராவை வாங்குகிறேன் என்று பதில் அளித்துள்ளார். இந்த வயதில் இவ்வளவு பக்குவமா என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.

insta

From around the web

Trending Videos

Tamilnadu News