×

கொரோனா வார்டில் அராஜகம் செய்யும் கனிகா கபூர் ! புலம்பும் மருத்துவர்கள்  

கொரோனா வைரஸோடு பார்ட்டிக்கு சென்ற பாடகி கனிகா கபூர், மருத்துவமனையிலும் மருத்துவர்களின் பேச்சைக் கேட்காமல் அராஜகம் செய்வதாக மருத்துவர்கள் புலம்பி வருகின்றனர்.

 

மும்பையைச் சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகி கனிகா கபூர் கடந்த மார்ச் 15 ஆம் தேதி லக்னோவுக்கு வந்தார்அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவரை 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால் அவரோ, அதை மதிக்காமல்  லக்னோவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில், நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டார். அவரின் இந்த பொறுப்பற்ற தன்மைக்கு கண்டனங்கள் எழுந்தன. அதன் பின்னர் அவருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கே அடம்பிடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் அனுமதிக்கப்பட்ட சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் மருத்துவமனை இயக்குநர் ஆர்.கே.திமான் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் ‘மருத்துவமனையில் அவருக்கு சிறப்பான வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அவருக்கு தனியானக் கழிவறை கொண்ட தொலைக்காட்சியோடு கூடிய அறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் குழந்தைத் தனமாக அடம்பிடிப்பதை நிறுத்திவிட்டு, ஒரு நோயாளியாக நடந்து கொள்ள வேண்டும். அவர் ஒரு ஸ்டார் என நினைத்துக் கொள்ளக் கூடாது.’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News