×

மக்களுக்கும் மந்திரிக்கும் கொரோனாவை பரப்பிய கனிகா... என்னம்மா இதெல்லாம்!

பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இங்கிலாந்தில் இருந்து லக்னோவுக்கு வந்தபோது, கொரோனா அறிகுறி காணப்பட்டது. ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று கொரோனா உறுதி ஆனது. 
 

பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இங்கிலாந்தில் இருந்து லக்னோவுக்கு வந்தபோது, கொரோனா அறிகுறி காணப்பட்டது. ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று கொரோனா உறுதி ஆனது. 

இதற்கிடையே, அவர் நடத்திய விருந்து நிகழ்ச்சியில் பா.ஜனதா எம்.பி.யும், ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேவின் மகனுமான துஷ்யந்த் சிங் கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது. அதன் பிறகு அவர் நாடாளுமன்றத்துக்கும் சென்றார். இதனால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் தங்களை  தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில்,  கனிகா கபூர் மீது அலட்சியம் மற்றும் ஒத்துழையாமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக காவல் ஆணையர் சுர்ஜித் பாண்டே கூறும்போது, சரோஜினி நகர் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

"ஐபிசி பிரிவுகள் 269 (கவனக்குறைவான செயலால், உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றைப் பரப்ப வாய்ப்புள்ளது), 270 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ள தீங்கு விளைவிக்கும் செயல்), 188 (அரசு ஊழியரின் உத்தரவுக்கு ஒத்துழைக்காமை) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சரோஜினி நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  லக்னோ தலைமை மருத்துவ அதிகாரியின் புகாரின் பேரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News